சாட்ஜிபிடிக்கு போட்டியாக கூகுளின் செயற்கை நுண்ணறிவு
பைல் படம்.
சாஅதில் சாட்ஜிபிடிக்கு போட்டியாக கூகுளின் பார்ட் (Bard) எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இந்தியா உட்பட 180 நாடுகளில் அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தனர். சாட்ஜிபிடி (ChatGPT) எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியிட்டது. இது ஊடகங்களிலும், தொழில்நுட்ப பயனர்கள் மத்தியிலும் விரைவில் பிரபலமானது. இதனுடன் நாம் உரையாடலாம்.
நாம் கேட்பவற்றில் செய்ய முடிந்ததை இது செய்து தரும். கடிதம் எழுதுவது, மீட்டிங்கிற்கு குறிப்பு எடுக்க உதவுவது, மெயில் தயாரிப்பு, கட்டுரை எழுதுவது, குறிப்பிட்ட தலைப்புகள் பற்றி சுருக்கமாக விளக்குவது, மொழி பெயர்ப்பது போன்றவற்றை செய்யும். இதன் வேகமான வளர்ச்சியால் முன்னணி டெக் நிறுவனங்களும் ஆராய்ச்சி அளவில் இருந்த தங்களின் செயற்கை நுண்ணறிவு தயாரிப்புகளை வேக வேகமாக களத்துக்கு கொண்டு வருகின்றன. அதில் ஒன்று தான் கூகுளின் பார்ட்.
இதனை பல ஆண்டுகளாக உருவாக்கி வருகின்றனர். இது பற்றி 2021ல் தெரியப்படுத்தினர். 'கூகுள் அசிஸ்டன்ட்' பிரிவின் பொது மேலாளர் சிஸ்ஸி சியாவோ, கூகுளின் பார்ட் ஏஐ பற்றி கூறியதாவது: பார்ட் தொடர்ந்து விரைவாக மேம்படுத்தப்பட்டு புதிய திறன்களைக் கற்று வருகிறது. உலகெங்கிலும் உள்ள மக்கள் இதை முயற்சிக்கவும் அவர்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் நாங்கள் விரும்புகிறோம். எனவே காத்திருப்புப் பட்டியலை நீக்கிவிட்டு 180க்கும் மேற்பட்ட நாடுகள் பார்டை பயன்படுத்த அனுமதிக்கிறோம், என்றார்.
பார்ட் (Bard) என்றால் என்ன? இது ஒரு உரையாடல் ரீதியான செயற்கை நுண்ணறிவு அல்லது தகவல்களை வழங்க பயிற்றுவிக்கப்பட்ட சாட்பாட் எனலாம். பெரிய அளவிலான டேட்டாக்களை வழங்கி இதனை பயிற்றுவித்துள்ளனர். பலவிதமான கேள்விகளுக்கு மனிதனைப் போன்று இதனால் பதிலளிக்க முடியும். சுருக்கமாக சொல்வதென்றால் வார்த்தையை வைத்து இதனிடம் விளையாடலாம். இதற்காக கூகுளின் நியூரல் நெட்வொர்க் ஆர்கிடெக்சர் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.
தற்போதைக்கு பரிசோதனை அளவில் இருப்பதால் அது வழங்கும் தகவல் சரிதானா என்று கூகுள் செய்து பார்க்கும் வசதியும் வழங்கப்படுகிறது.எப்படி பயன்படுத்திப் பார்ப்பது? கூகுள் கணக்கு மூலம் இதனைப் பயன்படுத்தலாம். bard.google.com என்ற தளத்திற்கு சென்று உங்களின் ஜிமெயில் ஐடி கொண்டு உள்நுழைய வேண்டும். பின்னர் அதன் கீழே 'என்டர் ஏ ப்ராம்ப்ட் ஹியர்' என்ற டேப் இருக்கும். அதில் உங்களுக்கு தேவையான தகவல்களை பெறலாம். உதாரணத்திற்காக நான் அதனிடம் “உனக்கு இந்தியாவின் புனித நதிகள் பற்றி தெரியுமா?” என்று கேட்டிருந்தேன். உடனே அது, ஆம் எனக்கு இந்தியாவின் புனித நதிகள் பற்றி தெரியும் என இவ்வாறு பதில் அளித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu