கூகுள் சார்பில் இந்தியாவுக்கு ரூ.135கோடி: சுந்தர்பிச்சை அறிவிப்பு

கூகுள் சார்பில் இந்தியாவுக்கு ரூ.135கோடி:  சுந்தர்பிச்சை அறிவிப்பு
X

கூகுள் நிறுவன சி.இ.ஓ. சுந்தர்பிச்சை 

கூகுள் சார்பில் இந்தியாவுக்கு ரூ.135கோடி நிதி வழங்கப்படுவதாக சிஇஓ சுந்தர்பிச்சை அறிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாம் அலையில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு கூகுள் நிறுவனம் ரூ.135 கோடி நிதியுதவி வழங்க இருப்பதாக சிஇஓ சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.


இந்தியாவில் கொரோனா 2வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 3.52 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பல மாநிலங்களில் மருந்து பொருட்கள் தட்டுப்பாடு, ஆக்சிஜன் பற்றாக்குறை என பல சிக்கல்களை சந்திக்கவேண்டிய நிலையில் இந்தியா உள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்சை அவரது டுவிட்டர் பக்கத்தில், ‛இந்தியாவில் பெருகி வரும் கொரோனா நெருக்கடியை கருத்தில் கொண்டு, கூகுள் நிறுவனம் சார்பில் இந்தியாவுக்கு ரூ.135 கோடி நிதியை வழங்கவுள்ளது. மருத்துவ உதவிகளுக்காக கூகுள் நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்கள் சார்பில் இந்த நிதி இந்தியாவுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/sundarpichai/status/1386528938889908231?s=20

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!