ஜி-மெயில் வைத்திருப்பவரா? கூகுள் எச்சரிக்கை..!
ஜி மெயில் கோப்பு படம்
ஜி.மெயில் தங்களது சர்வரில் இடவசதியை அதிகரிக்கும் வகையில் புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள். செப்டம்பர் 20ஆம் தேதிக்குள் பயன்பாட்டில் இல்லாத மின்னஞ்சல் (இ-மெயில்) முகவரிகள் டெலிட் செய்யப்படலாம் என்று கூகுள் வெளியிட்டிருக்கும் எச்சரிக்கைத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கைத் தகவலின்படி, 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி முதல் பயன்பாட்டில் இல்லாத மின்னஞ்சல் முகவரிகள் டெலிட் செய்யும் பணிகள் தொடங்கப்படலாம். அதாவது, கடந்த 2 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத ஜிமெயில் முகவரிகள் நீக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு சில விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து கூகுள் தெரிவித்திருப்பதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளாக, கூகுளின் ஜிமெயிலை ஒரு பயனர், எந்த வகையிலும் பயன்படுத்தவில்லை என்றால், அது நீக்கப்படும்.
அதாவது, ஜிமெயிலை லாக்-இன் செய்யாமலும், ஜிமெயிலில் எந்த வசதியையும் பயன்படுத்தாமலும், கூகுள் கணக்கில் எந்த மெயிலையும் அனுப்பாமல், பெறாமல், அதனை திறக்காமல் இருந்தால், அந்த ஜிமெயில் கணக்கு நிரந்தரமாக நீக்கப்படும்.
ஆனால், இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஒரு ஜிமெயில் முகவரியை ஏதேனும் நிறுவனம் உருவாக்கிக் கொடுத்திருந்தால், அதாவது, பள்ளியில், பணியிடங்களில், இதர தொழில்துறையினருக்கு நிறுவனமே உருவாக்கிக் கொடுக்கும் மின்னஞ்சல்கள் இந்த விதிகளுக்கு உள்பட்டிருந்தாலும் அவை நீக்கப்பட மாட்டாது என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே, ஜிமெயில் நீக்கப்படுவது மற்றும் அதிலிருக்கும் தகவல்களை நாம் இழப்பது போன்ற நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க, ஜிமெயில் பயனர்கள், ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொண்டாலே போதும் என்றும் வழிகாட்டுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu