அனைவருக்கும் வாரத்திற்கு இரண்டு முறை இலவசம்

அனைவருக்கும் வாரத்திற்கு இரண்டு முறை இலவசம்
X

இங்கிலாந்தில் உள்ள குடிமக்கள் அனைவருக்கும் வாரத்திற்கு இரண்டு முறை இலவசமாக கொரோனா தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டு சுகாதாரத்துறை செயலாளர் கூறுகையில்,கொரோனா பெருந்தொற்று காரணமாக நாம் இழந்துவிட்ட பழைய வாழ்க்கை முறையை மீண்டும் பெறுவதற்கு தடுப்பூசி செலுத்திக்கொள்வது தான் சிறந்த வழி.பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும்.

தடுப்பூசி திட்டத்தில் நாங்கள் தொடர்ந்து நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளோம்.அதனால் தற்போது இங்கிலாந்தில் உள்ள அனைவருக்கும் இலவச விரைவுச் சோதனை செய்வதற்கான வழிவகைகள் செய்துவருகிறோம்.10-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள், தங்கள் தொழிலாளர்களுக்கு விரைவுச் சோதனை அறிவுறுத்தும் படியும், பள்ளிகளில் தொடர்ந்து பரிசோதனைகள் தொடரும் என்று அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
ai future project