12 வயது முதல் 15 வயதினருக்கு பைசர் தடுப்பூசி.
அமெரிக்காவில் தற்போது வரை கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 35 லட்சத்தைக் தாண்டிள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5.96 லட்சத்தைத் எட்டி தற்போது எதிரான தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அங்கு பைசர், மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தங்களது தடுப்பூசியை 12 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் பயன்படுத்த ஒப்புதல் அளிக்குமாறு அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகத்திடம் பைசர் நிறுவனம் விண்ணப்பித்திருந்த நிலையில், அமெரிக்காவில் 12 வயது முதல் 15 வயதினருக்கு பைசர் தடுப்பூசியை அவசரகால தேவைகளுக்கு பயன்படுத்தலாம் என அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் வகையில் இது முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu