இந்தியாவின் போராட்ட ஸ்டைல் : ஆடிப்போன ஐரோப்பிய நாடுகள்..!

ஐரோப்பாவில் விவசாயிகள் போராட்டம். அணிவகுத்து நிற்கும் ட்ராக்டர்கள்.
உலகிற்கு பல விஷயங்களில் வழிகாட்டிய நாடு இந்தியா. அப்படிபட்ட இந்தியாவிடம் இருந்து ஒரு விஷயத்தை ஐரோப்பா எடுத்து கொண்டதில் ஆடிபோய்க் கிடக்கின்றன ஐரோப்பிய நாடுகள்.
இந்த விவகாரம் பெரியது. சுவாரஸ்யமானது என்றாலும் இப்போது பார்க்க வேண்டியது அந்த ஐரோப்பாவில் டிராக்டர்களுடன் நடக்கும் விவசாயிகள் போராட்டம். முன்பு இந்திய பஞ்சாபிய விவசாயிகள் செய்த அதே போராட்ட வடிவில் ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் சாலைக்கு வந்து விட்டனர். ஐரோப்பிய விவசாயிகள் இதே பாணியினை கையாள தொடங்கி உள்ளனர்.
தற்போது விவசாயிகள் போராட்டம் போலந்தில் தீவிரமாகி அப்படியே பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் பரவி உள்ளது. எல்லா நாடுகளின் சாலைகளும் டிராக்டர்களால் நிரம்பி வழிகின்றன.
இந்த விவசாயிகள் போராட்டத்துக்கு வழிகாட்டியது பஞ்சாபிய சிங்குகள் என்பதால் மனதுக்குள் சிங்குகளை ஐரோப்பிய விவசாயிகள் வணங்கி நன்றி தெரிவிக்கலாம். பஞ்சாபிய சிங்குகள் அதனால் குத்தாட்டம் போடலாம். விஷயம் இது தான். இதன் மூலகர்த்தா ரஷ்ய புடின் தான்.
எப்படி என்கிறீர்களா? ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மேல் யுத்தம் தொடுத்தார். அவரது கணிப்பின் படி சில நாட்களில் யுத்தம் முடிந்திருக்க வேண்டும் அதுதான் நிஜம். ரஷ்யாவின் ராணுவ பலம் அப்படி. ஆனால் நேட்டோ மற்றும் அமெரிக்க உதவியுடன் உக்ரைன் தனது பலத்தையும் காட்டியது. ஒரு கப்பல் கூட இல்லா உக்ரைன் பலமான ரஷ்யாவின் 25 கப்பல்களை மூழ்கடித்து சுமார் 800 டாங்கிகளை அழித்து ஏகப்பட்ட விமானங்களையும் நொறுக்கி விட்டது.
யுத்தம் 3ம் ஆண்டாக தொடர்கின்றது. ரஷ்யாவிடம் இன்னும் பெரும் ராணுவ பலம் உண்டு. சொந்த எண்ணெய், அபரிமிதமான விளைச்சல் என பல சாதகங்கள் இன்னும் ரஷ்யாவிற்கு உண்டு என்பதால் இன்னும் பல ஆண்டுகளுக்கு யுத்தம் நீடிக்கும்.
இந்த யுத்தத்தில் பல சுவாரஸ்யங்கள் நடந்தன. அமெரிக்காவின் கணக்கு ஆயுத போட்டியில் இருந்து ரஷ்யாவினை முடக்க வேண்டும் என்பது. அவ்வகையில் இனி ரஷ்யா தனக்கே பல ஆயுதங்களை செய்ய வேண்டும். அது நடந்து விட்டது. இன்னொரு பக்கம் ரஷ்யாவின் பலம் எண்ணெய் என்பதால் அதனை முடக்க நினைத்தார்கள். எண்ணெய் ரஷ்யாவின் பெரும் பலம். ஐரோப்பாவுக்கு ரஷ்ய எண்ணெய் தான் முழுக்க பாய்ந்து அவர்கள் பொருளாதாரத்தை தாங்கியது.
யுத்தத்தில் ரஷ்ய எண்ணெய்க்கு தடை என விழ அமெரிக்காவும் கனடாவும் பெரும் விலையில் எண்ணெய் விற்க இப்போது ஐரோப்பாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, விலைவாசிகள் கடுமையாக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவிலும் இந்த எதிரொலி உண்டு. எங்கோ இருவர் சண்டை என ஒதுங்கும் விஷயம் அல்ல இது. உலகின் ஒவ்வொரு பாதிப்பும் இன்னொரு நாட்டை நிச்சயம் தாக்கும். இதனாலே உக்ரைனுக்கு தொடர்ந்து நிதிகொடுக்க அமெரிக்க சென்ட் மறுக்கின்றது. அப்படி அமெரிக்க நிதி நின்று விட்டால் ஒரே நாளில் உக்ரைனை ரஷ்யா தூக்கி விடும்.
இப்படி பெரும் குழப்பத்தில் தான் உக்ரைன் யுத்தம் நடக்கின்றது. எல்லா இடமும் குழப்பம் அதிகம். இங்கே ரஷ்ய எண்ணெய் குறிவைக்கபட்டதும் புடின் சுதாரித்தார். அதே எண்ணையினை சீனாவுக்கும் இந்தியாவுக்கும் கொடுத்து வருமானத்தை ஈடுகட்டினார். மலிவு விலைதான் ஆனால், இருபெரும் நாடுகள் கப்பல் கப்பலாக வாங்கும் போது ஐரோப்பாவில் இழந்ததை இங்கே பெற்று விடலாம்.
இது காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா இருந்திருந்தால் அமெரிக்க மிரட்டலுக்கு அஞ்சி ரஷ்ய எண்ணெயினை தொட்டிருக்காது. மோடி துணிச்சலாக முடிவெடுத்ததில் இரு ஆண்டாக இந்திய எண்ணெய் சந்தை நிலையாக நிற்கின்றது.
ரஷ்யாவின் எண்ணெய்க்கு இப்படி மாற்று வந்தாலும் ரஷ்யா விடவில்லை. அது உக்ரைனின் தானிய ஏற்றுமதியினை குறி வைத்தது. ரஷ்யாவின் பலம் எண்ணெய் என்றால் உக்ரைனின் பலம் விவசாய தானியம். இந்திய பஞ்சாப் போல அள்ளிக் கொடுக்கும் பூமி அது. அந்த தானிய கப்பல்களை தானியங்களை ரஷ்யா குறிவைக்க உலகில் உணவுபொருள் தட்டுப்பாடு வந்தது. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்திலும் அரிசி விலை திடீரென உயர்வதில் இந்த பின்னணியும் உண்டு.
ஏற்கனவே எண்ணெய் விலை உயர்வால் குழம்பிய ஐரோப்பிய நாடுகள் உணவுபொருள் விலையாலும் ஆடிப்போய் கிடக்கின்றன. ஆனால் நேட்டோவில் ஐரோப்பிய யூனியனில் உக்ரைனை சேர்ப்போம், அப்படியே மக்களே சும்மா உக்ரைனுக்கு நாம் அள்ளி கொடுக்கவில்லை அவர்களுக்கு நாம் ஆயுதம் பணம் கொடுத்தோம். அவர்கள் இனி தானியம் தருவார்கள், காய்கறிகள் சமையல் எண்ணெய் எல்லாம் தருவார்கள் என தங்கள் மக்களுக்கு சொல்லி மகிழ்ந்தார்கள்.
விலைவாசி குறைப்புக்கான வழி இது. ரஷ்ய எண்ணெய் இல்லாமல் விலைவாசி உயர்ந்ததால், அதை குறைக்க உக்ரைனின் மலிவு விலை தானியத்துக்கு வந்தார்கள். இந்தியா,சீனாவுக்கு ரஷ்யாவின் மலிவு விலை எண்ணெய் போல, ஐரோப்பாவுக்கு உக்ரைனின் மலிவு விலை தானியம்.
ஆனால் சிக்கல் எங்கே வந்தது என்றால், மலிவு விலை எண்ணெய் வந்தால் சீனா இந்தியாவில் ஏதும் எதிர்ப்பு வராது காரணம் அங்கே யாரும் பெட்ரோல் எண்ணெய் உற்பத்தி செய்யவில்லை. ஆனால் விவசாயம் எல்லா நாட்டிலும் உண்டல்லவா. அப்படி ஐரோப்பாவிலும் உண்டு. அவர்கள் தங்கள் விவசாய உற்பத்திக்கு புடின் தயவில் நல்ல விலை கிடைப்பதாக மகிழ்ந்திருந்தார்கள்.
அங்கே உக்ரைன் தானியம் வருவதால் இனி தங்கள் பொருளுக்கு விலை இல்லை என போராட வந்து விட்டார்கள். "உக்ரைன் தானியங்களை வாங்காதே, உக்ரைன் பொருளை வாங்காதே" என ஐரோப்பிய தாடியில்லா சிங்குகள் டிராக்டரில் வந்து பெரும் போராட்டம் செய்கின்றார்கள். குறிப்பாக உக்ரைனின் தானியம் வரும் போலந்து சாலைகளில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது.
ஐரோப்பிய அரசுகளோ "லகுடபாண்டிகளா, இது போர் காலமடா. உக்ரைனை புடின் பிடித்து விட்டால் நம்மை நோக்கித்தான் வருவானடா, அதனால் உக்ரைனை நாம் கைகொடுத்து காக்கவேண்டும், நமக்காகத்தான் அவர்கள் சாகின்றார்கள்" என்றெல்லாம் மன்றாடினாலும் பலனில்லை. விவசாயிகளின் போராட்டம் தொடர்கின்றது.
சில நாட்களாக பெரும் எண்ணிக்கையில் டிராக்டர்களுடன் போராட்டங்கள் நடக்கிறது. ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் தானியங்களை வாங்காவிட்டால் அங்கு விலைவாசி எகிறும், சிக்கல் பெரிதாகும். உக்ரைனுக்கு தொடர்ந்து உதவமுடியாது. வாங்கினால் இனி விவசாயிகள் விடமாட்டார்கள்.
நாட்டின் அமைதி கெட்டு விடும். எது எப்படியோ ஐரோப்பாவில் எரிமலை வெடிக்கும் சூழல் வந்துவிட்டது. எல்லா இடமும் டிராக்டர்களே ஆக்கிரமித்து நிற்கின்றன அடுத்து மாடுகள் ஆடுகளெல்லாம் சாலைக்கு வரலாம். இப்போது அமைதியாய் புன்னகைப்பவர்கள் இருவர் மட்டுமே. ஒருவர் சந்தேகமே இல்லாமல் ரஷ்ய அதிபர் புடின். மனிதன் இரும்பல்ல அதையும் தாண்டி ஏதோ ஏலியன் உலோகம் .அப்படி உறுதியாக நிற்கின்றார்.
என்ன நடந்தாலும் உக்ரைனில் கைப்பற்றிய இடங்களை விடுவதில்லை. எத்தனை ஆண்டு போர் நடந்தாலும் அசரப் போவதில்லை என களத்தில் உறுதியாக நிற்கின்றார். அவரின் வியூகமும் அசாத்தியமானது. ஒரு பக்கம் வடகொரியாவினை தூண்டி விட்டுள்ளார். செங்கடல் பக்கம் அமெரிக்காவினை இழுத்து விட்டுள்ளார். இன்னொரு புறம் அரேபியாவின் பக்கம் அமெரிக்க கப்பல்படையை நிறுத்தி வைத்துள்ளார். ஆக புடினின் சுவாரஸ்யமான ஆட்டத்தால் உலகமே ஆடிக்கிடக்கின்றது.
அப்படிப்பட்ட புடின் உக்ரைனின் பொருளாதரத்தின் முக்கிய நாடியான தானிய ஏற்றுமதிக்கு ஒரு சிக்கல் எனும்போது சிரிக்காமல் என்ன செய்வார்.
ஐரோப்பாவில் நடக்கும் பெரும் விவசாய போராட்டத்தின் பின்னால் ரஷ்ய உளவுத்துறை உண்டா என்பது செய்தி இல்லை ஆனால் நடப்பதெல்லாம் ரஷ்யாவுக்கு அனுகூலம். இதனை ரசிக்கும் இன்னொரு தலைவர் யார் தெரியுமா அது இந்தியாவின் நரேந்திர மோடி. முன்பும் ஏன் இப்போதும் பஞ்சாபிய விவசாயிகளை யாரோ தூண்டிவிடுவதும், அவர்கள் பலே பல்லே என ஆடும்போது ஐரோப்பிய நாடுகள் இந்தியாவினை நோக்கி மனித உரிமை, அடக்குமுறை, விவசாயிகள் மேல் கொடூர சட்டம் என கவலை தெரிவித்து இந்தியாவினை சீண்டுவது வழக்கம்.
இப்போது அவர்களே வசமாக அதே சிக்கலில் சிக்கி கொள்ள பெரும் கவலை தெரிவிக்க தயாராகின்றது இந்தியா. இனி அவர்கள் இந்திய விவசாயிகள் போராட்டம் பற்றி பேசமுடியாது. அப்படி ஒரு நிலைவந்தால் நொடியில் இங்கே பஞ்சாபிய சிங்கெல்லாம் ஒழுங்காக களைபறிக்க சென்றுவிடுவார்கள். மோடி என்பவருக்கு சாதகமாக உலகமே மாறி அவர் காலடியில் வீழ்வது தொடர்கின்றது. எந்த பெரும் நெருக்கடியும் அவரை தொடுவதில்லை அவருக்கு சாதகமாகவே முடிகின்றன.
ஐரோப்பாவில் உக்ரைனின் தானியத்துக்கு பெரும் எதிர்ப்பு எழுந்து அது உக்ரைன் உறவை முறி என மிரட்டும் அளவு போராடமாக வெடித்திருக்கும் போது, கிரெம்ளின் மாளிகையில் தனக்கு பிடித்தமான காடை முட்டையும் பாலாடை கட்டியும் கலந்த கஞ்சியினை உறிஞ்சி கொண்டிருக்கின்றார் ரஷ்ய அதிபர் புட்டீன். பாரத பிரதமர் மோடி "ஜெய் ஸ்ரீராம்" என புன்னகைக்கின்றார்.
காரணம் அங்கேதான் விவசாயிகளுக்கும் அரசுக்கும் வன்முறை தொடங்கி தீ வைப்பு, கடும் அடக்குமுறை அடிதடி என காட்சிகள் களபேரமாகின்றன. ஐரோப்பிய யூனியனும் அமெரிக்காவும் இப்போது யார்மேல் கடுப்பில் இருப்பார்கள் தெரியுமா? சர்வ நிச்சயமாக ராகுல் மீது தான். காரணம் பஞ்சாபிய விவசாயிகளுடன் சேர்ந்து டிராக்டர் ஓட்டி உலகெல்லாம் மோடி அரசுக்கு எதிரான விளம்பரம்போல் இந்த கலாச்சாரத்தை உருவாக்கியது ராகுல் தான்.
அவரின் டிராக்டர் பாணியில் ஐரோப்பா முழுக்க டிராக்டர்கள் கிளம்ப சம்பந்தப்பட்ட நாடுகள் இதற்கு வழிகாட்டியது ராகுலார் என கடும் கோபத்திலிருக்கலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu