பிரச்சினையிலே நிற்கும் இங்கிலாந்து! பணமதிப்பும் வீழ்ச்சி...!

பத்து வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் மின்வெட்டு குறித்த பட்டியல் வெளியிடப்பட்டது. அதாவது காலையிலே ஆறு மணிக்கு ஆரம்பித்து ஒவ்வொரு ஏரியாவுக்கும் இரண்டு மணிநேரம் மின்வெட்டு இருந்தது. அதுவும் காலை எட்டு மணியில் இருந்து பத்து மணி வரை மின்வெட்டு என்றால் பெரும் சிக்கல் ஏற்படும்.
2014 க்கு பிறகு பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றது. இந்தியா வளர்ச்சியடைந்து மின்சார உற்பத்தியில் உயர்ந்து இன்றைக்கு மின்வெட்டு பெருமளவு குறைந்துவிட்டது. ஆனால் நம்மை ஆண்ட அந்த பிரிட்டிஷ் ஆட்கள் இன்றைக்கு மின்வெட்டிலேயும் மின்சார விலை உயர்விலேயும் சிக்கி அவதிப்படுகிறார்கள்.
இங்கிலாந்தில் மின்சாரத்தின் விலை 80 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு 100 பவுண்டு கட்டினால் இப்போது 180 பவுண்டு. நம்முடைய ருபாய் மதிப்புக்கு எதிராகவே இங்கிலாந்து பணம் சரிந்திருக்கிறது. ஒரு பவுண்டு 100 ருபாய் என ஒரு வருடம் முன்பு இருந்தது. இப்போது 87 ரூபாய்.
அங்கே பணவீக்கம் தலைவிரித்து ஆடுகிறது. 40 வருடங்களிலே இல்லாத விலை அதிகரிப்பு நிலவுகிறது. பவுண்டு மதிப்பு தலைகீழாக வீழ்ந்து வருகிறது. விலைவாசியை குறைக்க அடுத்த ஆறு மாதங்களுக்கு 67 பில்லியன் டாலர்களை செலவு செய்வோம் எனவும், இன்னோர் பக்கம் 45 பில்லியன் டாலர்களுக்கு வரி குறைப்போம் என சொல்லி வாய் முடல. இது பொருளாதாரம் தடாலடியாக விழுந்து விட்டது.
முன்னேறிய பொருளாதாரம் என்பதற்கு பதிலாக வளரும் பொருளாதாரம் என சொல்லப்படும் நிலைக்கு இங்கிலாந்து போயிட்டு இருக்கு. ஏழெட்டு வருசம் முன்னாடி இங்கிலாந்து பேங்க் நம்மூர் ரிசர்வ் பேங்க் மாதிரி அந்த பேங்க் கவர்னர் ‘இங்கிலாந்தின் பொருளாதாரம் முன்பின் தெரியாதவர்களின் இரக்கத்தை நம்பியிருக்கிறது என’ தெரிவித்திருந்தார்.
இதன் அர்த்தம் என்ன? இதுவரை அடுத்தவன் காசை எப்படியாவது அள்ளிப்போட்டு வாழ்ந்துட்டு இருக்காங்க என பொருள். இங்கிலாந்தின் இறக்குமதி ஏற்றுமதிக்கு இடையே இருக்கும் கடன் 45 பில்லியன் டாலர்கள். ஜிடிபியிலே 5.3 சதவீதம். அதாவது இங்கிலந்து இறக்குமதியை தான் அதிகம் செய்கிறது. ஏற்றுமதி குறைந்து விட்டது.
ஒப்பீட்டுக்கு இந்தியாவோடது 23 பில்லியன் தான். முன்னாடி 13 பில்லியன் வைச்சிருந்தோம். அதுக்கு முன்னாடி ஏற்றுமதி அதிகம் இருந்தது. அதுவே 6 பில்லியன் டாலர்கள் கூடுதலா வைச்சிருந்தோம். தற்போது இங்கிலாந்தின் அந்நிய செலவாணி கையிருப்பு வெறும் 89 பில்லியன் டாலர்கள் தான். இந்தியாவிடம் தற்போது 550 பில்லியன் டாலர்கள் இருக்குது.
இதுவரை மற்ற நாடுகளின் காசிலே வாழ்ந்து வந்த நாடுகள் ஒவ்வொன்றாக வீழ்கின்றன அல்லது வீழ ஆரம்பித்து இருக்கின்றன. அந்த வரிசையிலே பங்களாதேஷ், மலேசியா, என ஆரம்பித்து இப்போது இங்கிலாந்தும் தடுமாறி நிற்கிறது. இங்கிலாந்து அடுத்த திவால் ஆகும் நாடாக இருக்கும் என உலக பத்திரிக்கைகளே சொல்கின்றன.
அதே நாளிதழ்கள் இந்தியாவின் பொருளாதாரத்தை பற்றி வியந்து எழுதியிருக்கின்றன. நாமெல்லாம் மோடியின் முடிவுகளை நினைத்து பார்க்கவேண்டும். நிர்மலா சீதாராமன், சஞ்சீவ் சான்யால், ஷ்க்திகாந்த தாஸ் என்பவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu