Earth destruction- பூமி அழிவு எப்போது? நாசா அதிர்ச்சி தகவல்

Earth destruction- பூமி அழிந்துவிடுமா? (மாதிரி படம்)
இந்த கேள்விக்கு விஞ்ஞானிகளும் ஆண்டு ஆண்டு காலமாக துல்லியமான பதிலைக் கண்டுபிடிக்க பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா இதுகுறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறது. இப்போது மேற்கொண்டிருக்கும் புதிய ஆய்வில் பூமியின் அழிவு எப்போது? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளது. அதன்படி, இன்னும் ஒரு பில்லியன் ஆண்டுகள் மனிதர்கள் பூமியில் வாழ முடியும் என தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில், சூரியன் வயதாகும் போது, அது பூமியின் வளிமண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவைக் குறைக்கும். இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவதாக, சூரியன் வெப்பமாகி, அதிக ஆற்றலை வெளியிடும். இது பூமியின் வளிமண்டலத்தை சூடாக்கும், இது கார்பன் டை ஆக்சைடு உருவாவதை அதிகரிக்கும். கார்பன் டை ஆக்சைடு என்பது ஒரு கிரீன்ஹவுஸ் வாயு ஆகும், இது பூமியின் வெப்பத்தைப் அதிகரிக்கும்.
இரண்டாவதாக, சூரியன் வயதாகும் போது, அதன் காந்தப்புலம் பலவீனமடையும். இது புவியின் வளிமண்டலத்தில் உள்ள ஆற்றல்களை அகற்றும். இதன் மூலம் ஆக்ஸிஜன் உற்பத்தி தடைபட்டு தாவரங்கள் மற்றும் உயிரினங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் போகும்.
இந்த இரண்டு காரணிகளும் இணைந்து, பூமியின் வளிமண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவைக் குறைக்கும். இறுதியில், வளிமண்டல கார்பன் டை ஆக்சைடை உடைக்கும் ஒரு புள்ளியை பூமி அடைகிறது. அந்த நேரத்தில், ஒளிச்சேர்க்கையை நம்பியிருக்கும் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் இறந்து விடும். மனிதர்களுக்கும் பிற விலங்குகளுக்கும் தேவைப்படும் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தைத் தக்கவைக்க நமது கிரகத்தில் போதுமான உயிர்கள் இருக்காது. இத்தகைய சூழலில் பூமியில் எந்தவொரு உயிரினங்களும் வாழ முடியாது.
இது ஒரு தவிர்க்க முடியாத நிகழ்வு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், அது எப்போது தொடங்குகிறது மற்றும் எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதற்கான துல்லியமான நேரம் பரந்த அளவிலான பல்வேறுபட்ட காரணிகளைப் பொறுத்தது. இதன்அடிப்பைடயில் காலவரிசையை ஆராயும் போது பூமியில் உயிர்வாழ்வதற்கான காலவரிசை சுமார் ஒரு பில்லியன் ஆண்டுகள் வரை இருக்கும் என்று நாம் கூறலாம். அதற்குப் பிறகு, பூமியின் மேற்பரப்பில் இருந்து உயிர்கள் அனைத்தும் அழிந்து விடும்.
எனவே, மனிதகுலம் இன்னும் பில்லியன் ஆண்டுகள் (100 கோடி ஆண்டுகள்) பூமியில் உயிர்வாழ்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால், அதற்கு நாம் வேறு கிரகங்களைக் கண்டுபிடித்து அங்கு குடியேற வேண்டும். யப்பா நினைக்கும் போதே தலை சுத்துது.
வானியல் இதழ் NASA ஆராய்ச்சியை மேற்கோள் காட்டி, பூமியில் உள்ள அனைத்து உயிர்களையும் நிரந்தரமாக அழிக்கக்கூடிய ஒரு நிகழ்வைப் பற்றி கூறுகிறது. "நாசா நெக்ஸஸ் ஃபார் எக்ஸோப்ளானெட் சிஸ்டம் சயின்ஸ் (NExSS), அட்லாண்டா, ஜிஏ, யுஎஸ்ஏ" லிருந்து கிறிஸ்டோபர் டி. ரெய்ன்ஹார்ட் மற்றும் "சுற்றுச்சூழல் அறிவியல் துறை, டோஹோவில் இருந்து கசுமி ஓசாகி" ஆகிய இரு விஞ்ஞானிகளால் நேச்சர் ஜியோசயின்ஸ் இதழில் மார்ச் மாதம் இந்த ஆய்வு கட்டுரை வெளியிடப்பட்டது. அதில் இதற்கு முன்பு பூமியில் ஏற்பட்ட மாற்றங்கள், டைனோசர் உள்ளிட்ட உயிரினங்களின் அழிவு குறித்தும் தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu