குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு..!

குடியரசு கட்சி வேட்பாளராக  டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு..!
X

டொனால்ட் டிரம்ப் 

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வருகிற நவம்பர் 9-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர்.

தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ளதால் இருவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே குடியரசு கட்சி வேட்பாளர் தேர்தல் அனைத்து மாகாணங்களில் நடைபெற்றது. இதில் குடியரசு கட்சியினரிடையே டிரம்புக்கு அதிக ஆதரவு இருந்தது.

எனவே இந்திய வம்சாவளியான நிக்கி ஹாலே தவிர மற்ற வேட்பாளர்கள் அனைவரும் போட்டியில் இருந்து விலகினர். இந்த நிலையில் தற்போது நிக்கி ஹாலேவும் அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து விலகியதால் அந்த கட்சியின் வேட்பாளராக டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. எனவே அவரை அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிப்பதற்கான குடியரசு கட்சியின் மாநாடு விஸ்கான்சின் மாகாணம் மில்வாகீ நகரில் நடைபெற்றது. அப்போது அதிபர் வேட்பாளராக டிரம்ப் அறிவிக்கப்பட்டார்.

சில நாட்களுக்கு முன்னர் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற டொனால்ட் டிரம்ப் மீது இருபது வயது இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்ப் மயிரிழையில் உயிர் தப்பியது எல்லோருக்கும் தெரியும். இந்த சம்பவம் குறித்து அமெரிக்க அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

Tags

Next Story