அமெரிக்காவில் இனி தேர்தல் இல்லை: டிரம்ப் தரும் 'அதிர்ச்சி வைத்தியம்'..!

அமெரிக்காவில் இனி தேர்தல் இல்லை: டிரம்ப்  தரும் அதிர்ச்சி வைத்தியம்..!
X

டொனால்டு டிரம்ப் 

இந்த முறை என்னைத் தேர்ந்தெடுங்கள். பிறகு எப்போதும் வாக்களிக்க வேண்டியிருக்காது என டிரம்ப் அதிர்ச்சி பிரசாரம் செய்து வருகிறார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதத்தில் நடக்க விருப்பதால், தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், புளோரிடாவின் வெஸ்ட் பாம் கடற்கரையில் நடத்தப்பட்ட பிரசாரத்தில் பங்கேற்ற டிரம்ப் கிறிஸ்தவர்களிடையே உரையாற்றினார்.

தொடர்ந்து பேசிய டிரம்ப், ``நான் கிறிஸ்தவர்களை நேசிக்கிறேன். நான் ஒரு கிறிஸ்துவன். கிறிஸ்தவர்களே, வெளியே வந்து வாக்களியுங்கள். இன்னும் நான்கு ஆண்டுகள், நீங்கள் மீண்டும் வாக்களிக்க தேவையில்லை. நாங்கள் சரி செய்து விடுவோம், அது உங்களுக்கே தெரியும். ’’ என்று கூறினார்.

பிரசாரத்தில் டிரம்ப் கூறிய கருத்துக்களுக்கு என்ன அர்த்தம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. டிரம்ப் பேசியது குறித்து விளக்கமளிக்கக் கோரியும் விளக்கமளிக்கப்படவில்லை.

இருப்பினும், டிரம்ப் பேசியது குறித்து, பிரசாரத்தின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் சியுங்கிடம் கேட்டபோது, ``டிரம்ப் நம்பிக்கையின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுகிறார்’’ என்று கூறியுள்ளார்.

குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்பை தோற்கடிக்கக்கூடிய ஜனநாயகக் கட்சியின் ஒரே போட்டியாளராக கமலா ஹாரிஸ் உருவான பிறகு மிச்செல் ஒபாமா கமலா ஹாரிஸை ஏன் ஆதரித்தார்.? பிடன் தேர்தலில் போட்டி இடாமல் ஒதுங்கியதால் கமலா ஹாரிஸ் அதிபர் போட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

முன்னாள் முதல் பெண்மணி மிச்செல் ஒபாமா 2024 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸை ஆதரித்திருந்தாலும், அவர் நாட்டின் உயர்மட்ட பதவிக்கு மிகவும் விரும்பப்படும் ஜனநாயகக் கட்சித் தலைவர் ஆவார். 'தி டெமாக்ரசி இன்ஸ்டிடியூட்' உடன் இணைந்து 'டெய்லி எக்ஸ்பிரஸ் யுஎஸ்' நடத்திய கருத்துக் கணிப்பில், மிச்செல் ஒபாமா 41% வாக்குகளைப் பெற்று மற்ற அனைத்து ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களையும் விஞ்சினார். மற்றொரு முன்னாள் முதல் பெண்மணி ஹிலாரி கிளிண்டன் 18% வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.கமலா ஹாரிஸ் 11% வாக்குகள் மட்டுமே பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!