ரஷ்யாவின் வலைக்குள் விழுந்ததா ஈரான்?

ரஷ்யாவின் வலைக்குள் விழுந்ததா ஈரான்?

இஸ்ரேல்-ஈரான் 

எதிர்பார்த்தபடியே ஈரான் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால் இஸ்ரேலிடம் பதட்டமில்லை.

ஈரான் உருவாக்கிய ஹெஸ்புல்லாவின் தலைவர் ஈரானியே மற்றும் இதர பெரிய தளபதிள் கொல்லப்பட்டதாலும், லெபனானுக்குள் புகுந்து ஹெஸ்புல்லாவை அடிப்பதாலும் ஈரான் தன்னை கடுமையாக தாக்கும் என இஸ்ரேல் எதிர்பார்த்தது.

ஏற்கனவே கடந்த ஏப்ரலில் சுமார் 500 ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் இஸ்ரேலை ஈரான் தாக்கியது. ஆனால் இஸ்ரேலுக்கு ஒரு நெல்மணி அளவு கூட சேதம் இல்லை. ஆனால் பதிலுக்கு ஈரானின் பாதுகாப்பான வான் தடுப்பு சாதனங்களையே இஸ்ரேல் போய் நொறுக்கி போட்டு விட்டு வந்தது. இது ஈரானுக்கு பெரும் எச்சரிக்கையாக நடந்தது.

அப்படியான நிலையில் ஈரான் மறுபடி வரும் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள். அப்படி அடித்தால் அவமானம் மற்றும் மீண்டும் முதுகில் அடிவிழும் என ஈரானும் மௌனம் காத்தது. ஆனால் தொடர்ந்து அடிமேல் அடிவிழும் போது ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயம் ஈரானுக்கும் ஏற்பட்டது.

இஸ்ரேலோ "என்னடா இது, அவர்களின் அதிபரே போய் சேர்ந்து விட்டார். ஹெஸ்புல்லாவின் தலைவர் உள்ளிட்ட எல்லோரையும் தூக்கி விட்டோம் , ஹமாஸ் அதிபரை ஈரானுக்குள்ளே தூக்கி விட்டோம். இத்தனை செய்தும் இன்னும் தாக்கவில்லையா?, இன்னுமா வரவில்லை, அதோ வருவது ஈரானிய ஏவுகணையா , இல்லையா?, இதோ வருவது அவர்கள் விமானமா" என எப்போதும் கையில் தடுப்புடன் வானத்தை பார்த்து கொண்டே இருந்தது. எப்போதும் ஈரான் தாக்கும் என எதிர்பார்க்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் எப்போதோ தாக்குதலை தடுக்க தேவையான முக்கிய ஏற்பாடுகளை செய்தன.

அதன்படி ஈரான் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய செயற்கை கோள்களால் அணுக்கமாக கண்காணிக்கப்பட்டன, அங்கிருந்து ஏவுகணை கிளம்பினால் உடனே தெரிந்து விடும். ஈரானுக்கும் இஸ்ரேலுக்குமான தொலைவு சுமார் 2.400 மைல்கள், இவ்வளவு தூரம் ஒரு ஏவுகணை பயணிக்க குறைந்தது 10 முதல் 15 நிமிடமாகலாம்.

இந்த 15 நிமிடத்துக்குள் முதல் செகண்டிலே இஸ்ரேலில் அபாய சங்கு ஒலிக்கும். இஸ்ரேல் மக்கள் போருக்கு மிகவும் பழக்கப்பட்டவர்கள். இதனால் சத்தம் கேட்டதும் சிரித்தபடி பதுங்கு குழிக்குள் ஓடிவிடுவார்கள், அவர்களின் பயிற்சி இது. அது அங்கு வழக்கமாக நடக்கும் விஷயம்.

இந்நேரம் இஸ்ரேலின் வான்பாதுகாப்பு சாதனம், அமெரிக்க கப்பல்களின் வான் தடுப்பு, ஜோர்டான், ஈராக், பஹ்ரைன் என பல இடங்களில் இருக்கும் அமெரிக்க சாதனங்கள் எல்லாம் பதில் ஏவுகணையினை ஏவிவிடும். சரியாக ஈரானிய ஏவுகணைகள் வரும் போது அவை இடைமறிக்கும்.

நேற்று முன்தினம் ஏவப்பட்ட 189 ஏவுகணைகள் அப்படி அழிக்கப்பட்டன, அதன் சிதறிய பாகங்களில் ஒன்று பாலஸ்தீன மேற்கு கரையில் அகதிகள் முகாமில் விழுந்து ஒருவர் கொல்லப்பட்டார். அவர் பாலஸ்தீனியர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றபடி இந்த தாக்குதலால் இஸ்ரேலில் எந்த சிக்கலும் இல்லை. அவர்கள் ஈரானிய ஏவுகணை மிரட்டல் முடிந்தது என அறிவித்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டனர். இயல்பு வாழ்க்கை என்றால் வழமைபோல் லெபனானை போட்டு சாத்தி ஹெஸ்புல்லாக்களை முடித்து ஒழிப்பது தான். இனி இந்த இயல்பில் ஈரானும் சிக்கி கொள்ளும். ஈரானை தொட்டால் எண்ணெய் விலை உயரும், ஈரான் அப்படி செய்யும் இப்படி செய்யும் என்பதெல்லாம் அர்த்தமற்ற சத்தம்.

ஒரு போரை தொடங்கும் போது எல்லா நாட்டிடமும் போர் திட்டம் ஒன்று இருக்கும். அதில் சம்பந்தப்பட்ட நாட்டை தாக்கினால் என்னாகும் என எல்லாமும் அலசப்படும். அதில் எண்ணெய் விலையும் ஒன்று. ஈரானின் எண்ணெய் ஏற்கனவே முடக்கபட்டிருக்கின்றது. இன்னும் முழுவதும் முடக்கப்பட்டால் சவுதி உள்ளிட்ட இதர எண்ணெய் வளம் மிகுந்த அரபு நாடுகளுக்கு கொண்டாட்டம் தான். அப்படியே இந்தியாவுக்கு மலிவு விலை எண்ணெய் கொடுக்கும் ரஷ்யாவுக்கும் பெரும் கொண்டாட்டம் தான்.

ரஷ்ய மலிவு எண்ணெய் போலவே ஈரானிய எண்ணெயும் இந்தியா, சீனாவுக்கு செல்லும். ஒருவேளை ஈரானை விரட்டி விட்டால் இந்திய, சீன எண்ணெய் சந்தை என எல்லாம் நமக்கு தான் என புதின் எண்ணுகின்றாரோ என்னவோ?. படு பயங்கரமான ஆசாமியான ரஷ்ய அதிபர் புதின் அப்படி திட்டமிட்டாலும் ஆச்சரியமில்லை.

அதனால் இதெல்லாம் இந்தியாவுக்கு ஆபத்து இல்லை. ஏதோ ஒரு படத்தில் ஊருக்குள் என்ன நடந்தாலும் கவலைபடாமல் "நீ ரசத்த ஊத்து ஆத்தா" என இலைமுன் அமர்ந்திருக்கும் செந்திலை போல, "நீ எண்ணைய ஊத்து ராசா" என புதினிடம் கேட்டு விட்டு தன் போக்கில் இருக்கின்றது இந்தியா.

மற்றபடி ஈரானில் இருக்கும் இந்திய நிலையமான சபஹர் துறைமுகமோ அதன் இந்திய பிடிமானமோ இதனால் பாதிக்கப்படாது. அதெல்லாம் வேறுவகை அரசியல். இந்தியாவின் கையில் இருப்பதால் ஈானின் சபஹர் துறைமுகம் பாதுகாப்பாக இருக்கும். அதை தவிர இனி ஈரானில் ஏதும் இருக்குமா என்பது இனிதான் தெரியும்.

Tags

Next Story