சூரியனுக்கு இணையான வெப்பம் நிலவும் நெப்டியூன் பற்றி தெரியுமா?
அது சூரியனிலிருந்து பூமிக்கு உள்ள தூரத்தை விட 30 மடங்கு விட அதிகமாக உள்ளது. நெப்டியூன், பூமியை விட 17 மடங்கு அதிகமான நிறை கொண்டது. இதன் அர்த்தம், நீங்கள் பூமியில் 100 கிலோ எடை கொண்டிருந்தால், நெப்டியூனில் 1700 கிலோ எடையுடன் இருப்பீர்கள்.
நெப்டியூனில் இறங்கினால் "தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு" என்ற பாட்டை உடனே பாடவேண்டி இருக்கும். காரணம் நெப்டியூனில் காற்று அடிக்கும் வேகம் அப்படி. அதாவது நெப்டியூனில் புயல் காற்று வீசும் வேகம் ஒலியை விட வேகமானது. சூப்பர்சானிக் சூறாவளி.
அங்கே மணிக்கு 2,100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது. இது பூமியில் ஏற்படும் சுனாமிகளின் வேகத்திற்கு நிகரானது. நெப்டியூனில் இறங்கினால் ஒவ்வொரு நிமிடமும் சுனாமி தான். நெப்டியூன், சூரிய மண்டலத்தின் மிக குளிர்ந்த கிரகம் ஆகும். அதன் மேற்பரப்பு வெப்பநிலை சுமார் மைனஸ் 214 டிகிரி செல்சியஸ் ஆகும். இதில் அதிசயம் எதுவும் இல்லை தான். ஆனால் சூரிய மண்டலத்தில் மிகவும் குளிர்ந்த கிரகமாக இருந்தாலும், நெப்டியூனின் வளிமண்டலம் ஆச்சரியமான அளவு வெப்பத்தை வெளிப்படுத்துகிறது.
அதாவது நெப்டியூனின் வளிமண்டலத்தில் காற்று மிக அதிகம். நெப்டியூன், மற்ற வாயுக் கோளங்களைப் போல, ஈர்ப்பு சுருக்கம் என்ற செயல்பாட்டின் மூலம் வெப்பத்தை உருவாக்குகிறது. அதன் ஈர்ப்புவிசை வெப்பமாக மாற்றப்படுகிறது. அதனால் நெப்டியூனின் வளிமண்டலத்தில் வெப்பநிலை சுமார் 5,000 டிகிரி செல்சியஸ் (9,000 டிகிரி பாரன்ஹீட்) ஆகும். இது சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலைக்கு நிகரானது.
நெப்டியூனில் பூமியின் பெருங்கடல்களில் உள்ள நீரின் அளவை விட சுமார் 50,000 மடங்கு கூடுதல் நீர் பனிக்கட்டியாக உள்ளது. இது மிக கொடூரமான குளிருடன் சூப்பர் அயனியாக் பனிக்கட்டி என்ற வகை நீராக உள்ளது.
வரும்காலத்தில் எதாவது விபத்து நிகழ்ந்து, உதாரணமாக நெப்டியூனின் வளிமண்டலத்தின் மீது ஒரு சிறிய கிரகம் மோதி அதன் வளிமண்டல வெப்பத்தை அதிகரித்தால், அது சூப்பர் அயனியாக் பெருங்கடல்களை உருக்கி, கிரகத்தின் மேற்பரப்பில் மாபெரும் சமுத்திரங்களை திரவநிலையில் உருவாக்கலாம். இது நடக்காது என எல்லாம் சொல்ல முடியாது. இப்படி நடந்தால், புதிய கடற்பரப்பு கடலில் உயிரின் தோற்றத்திற்கான சூழ்நிலைகளை உருவாக்கலாம். ஆனால் இப்போதைக்கு இது சும்மா சயன்ஸ் பிக்சக்ன் கதைகளுக்கு தான் உதவும்.
சுனாமி, வளிமண்டல வெப்பம், மாபெரும் சமுத்திரம் என மிக வித்தியாசமான நிலவியல் நெப்டியூனுடையது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu