Deserted Hamas,-தனித்து விடப்பட்ட ஹமாஸை புரட்டி எடுக்கும் இஸ்ரேல்..!

Deserted Hamas,-தனித்து விடப்பட்ட ஹமாஸை புரட்டி எடுக்கும் இஸ்ரேல்..!
X

இஸ்ரேல் தாக்குதலில் சிதைந்து கிடைக்கும் கட்டிட பொருட்களில் அகற்ற முயற்சிக்கும் காஸாவினர்.

துாண்டி விட்ட நாடுகள் கை விட்ட நிலையில் ஹமாஸ் இயக்கம் தனியே இஸ்ரேலிடம் சிக்கிக் கொண்டு விழிபிதுங்கி வருகிறது.

இஸ்ரேல் அரேபிய நாடுகளில் 600 ல் ஒரு பங்கு கொண்ட மிகச்சிறிய நாடு. முன்பு அங்கிருந்து வாழமுடியாமல், வழியில்லாமல் வெளியேறி உலகெங்கும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் வட்டி தொழிலை பிரதானமாக செய்தவர்கள். பின்பு தொழில் நுட்பத்தில் உலகளவில் உயர்ந்தார்கள், வளர்ந்தார்கள்.

இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன், ஹிட்லரின் ஆயுதங்களையும், அங்கிருந்த யூதர்களையும் தங்கள் நாட்டிற்கு கூட்டிச்சென்றவர்கள் அமெரிக்கர்களும், ரஷ்யர்களும். அதனால் அமெரிக்காவில் இருக்கும் மிக முக்கியமான தொழில்களும், அமெரிக்க அரசாங்கத்தில் Strategic Decision எடுக்கின்ற இடத்தில் இன்றும் இருப்பவர்கள் யூதர்களே. இன்றும் ரஷ்யாவுடன், இஸ்ரேலியர்கள் உறவுடன் தான் இருக்கிறார்கள்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்கா யூதர்களால் ஆளப்படுகிறது என்று தான் சொல்வார்கள். இன்று உலகின் மிக முக்கிய ஆராய்ச்சிக்கூடம், தொழில் நுட்பத்தின் மூளை என்று சொன்னால், அது அமெரிக்காவை சொன்னாலும், அதன் வேர்கள் இஸ்ரேலையே குறிக்கிறது. அதனால் தான், இஸ்ரேலையும் யூதர்களையும் மிக பலம் வாய்ந்தவர்கள் என்றும், தங்களிடம் இல்லாத ஒன்று என்பதால் அது ஒரு நாள் மொத்த அரேபியாவையும் அடிமைப்படுத்தி விடும் என்று பயப்படுகிறது அரபுலக நாடுகள்.

உலகையே ஆண்டாலும், தங்களுக்கு சொந்தமாக ஒரு நாடு இல்லை என்ற ஏக்கம் யூதர்களுக்கு உண்டு. அதற்காக அவர்கள் அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ ஒரு நாட்டை பாதுகாப்பாக ஏற்படுத்தி இருக்க முடியும். ஆனால் அவர்கள் பூர்வீகத்தினர் வாழ்ந்த அந்த மண்ணில் தான் வாழ வேண்டும் என்பதற்காக, இஸ்லாமிய ஆதிக்கமும், தீவிரவாதமும் நிறைந்த அந்த மண்ணில், பேருக்கு அரபு நாடுகளில் 600 ல் ஒரு பங்கு கொண்ட ஒரு சிறிய இடத்தில் வசிக்கின்றனர். அந்த இடம் தான் இஸ்ரேல் என்ற நாடாக உள்ளது.

அப்படிப்பட்ட இஸ்ரேல் என்பது நாடு பிடிக்கும் வெறி கொண்ட நாடு என்பது போல ஒரு இமேஜை இஸ்லாமிய நாடுகள் பரப்புகின்றன. ஆனால் அது 1967 ல் ஆறே நாளில் 5 நாடுகளை மண்டியிட வைத்து சினாய் என்ற மிகப்பெரிய எகிப்தின் தீபகற்ப பகுதியை பிடித்தது. தான் போரில் அந்த பகுதியை முழுமையாக வென்ற பின்னரும், தனக்கு வேண்டாம் என்று அந்த நிலப்பகுதியை திருப்பி கொடுத்த நாடு இஸ்ரேல் என்பதை மறந்து விடக்கூடாது.

அது மட்டுமல்ல, இன்று இஸ்ரேல் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை என்று சொல்கிறது இஸ்லாமிய நாடுகள். ஆனால் Gaza, மற்றும் West Bank பகுதியை 1948ம் ஆண்டு இஸ்ரேலிடம் இருந்து கைப்பற்றி, 1967 வரை 19 ஆண்டுகள் ஜோர்டானும், எகிப்தும் வைத்திருந்தன. ஏன் அப்போது காசாவை பாலஸ்தீனத்திற்கு வழங்கி அதனை தனி நாடாக உருவாக்காமல், தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்? அதை இஸ்லாமிய நாடுகள் அன்று ஏன் எகிப்து, ஜோர்டான், சிரியாவிடம் கேட்கவில்லை? காரணம் வைத்திருந்தது இஸ்லாமிய நாடு என்ற போதும் இதன் பின்னால் ஒளிந்திருப்பது வேறு ஒரு காரணம்.

இஸ்ரேல் நாட்டின் இருபுறமும், பாலஸ்தீனம் இருந்தது. ஆனால் அதையும் எகிப்தும், ஜோர்டான், சிரியா நாடுகள் 1948 ல் கைப்பற்றிய போது, பாலஸ்தீன மக்களுக்கு எந்த ஆளுமையையோ, அதிகாரத்தையோ கொடுக்காமல், அதை 19 ஆண்டுகள் ஆண்டது. அதன் பின்னர் இஸ்ரேல் அந்த பகுதிகளை கைப்பற்றிய பின்னர், அந்த பகுதிகளை பாலஸ்தீனர்கள் ஆள்வதற்கு உரிமை கொடுத்தது.

ஆனால் பாலஸ்தீனர்களால் அதை ஆள தெரியாததாலும், அரபு நாடுகள் இந்த இஸ்ரேலை மொத்தமாக அழித்தே ஆகவேண்டும் என்ற தீராத பகை கொண்டதாலும், அந்த பாலஸ்தீன நாடுகள் மூலம், தீவிரவாதத்தை தூண்டி விட்டன. தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட இஸ்ரேல் அதன் மீது நடவடிக்கைகள் எடுப்பதும், கட்டுப்படுத்துவதும், பின்பு சில அதிகாரங்களை கொடுப்பதும், அது மீண்டும் பிரச்சினைகளை உண்டாக்குவதும் என்பது அங்கே சர்வ சாதாரண லைப் சைக்கிள் ஆக உள்ளது.


அப்படிப்பட்டதில் ஒரு பகுதியான, காஸாவிற்கு உலக நாடுகள் கொடுத்த பணத்தை மக்களுக்கு கொடுத்ததில்லை. ஒரு காஸா பெண், தனக்கு மூன்று மகன்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால் ஹமாஸில் உள்ளவர்கள் பணக்காரர்களாக இருப்பது எப்படி என்று கேள்வி எழுப்பிய வீடியோ சமீபத்தில் வைரலானது. அதாவது அங்கே சுகபோக வாழ்க்கை வேண்டுமென்றால், இஸ்ரேலை வெறுக்க வேண்டும். அடுத்து ஹமாஸில் சேர வேண்டும்.

ஹமாஸ் தீவிரவாதிகள் உலக நாடுகளும், அரேபிய நாடுகளும் கொடுத்த பெரும் நிதியைக்கொண்டு ஆயுத போராட்டத்தையும், பல அண்டர்கிரௌண்ட் தளங்களையும் அமைத்து, அங்கே ஆயுதங்களை குவித்துள்ளனர். அவர்கள் பெரிய அளவில் தொடர்ந்து பிரச்சினை செய்ததால், தங்களை பாதுகாத்துக்கொள்ள காஸா எல்லையில் வேலி அமைத்தார்கள். சரி, இஸ்ரேல் தான் இன உணர்வில் வேலி அமைத்து பிரித்தது என்றால், எகிப்து அதன் எல்லையில் எதற்கு அவ்வளவு பெரிய வேலி அமைத்து தடுத்தது? இவர்கள் தீவிரவாதிகள், அனுமதித்தால் தம் நாட்டுக்குள் பிரச்சினை உருவாகும் என்பதால் தானே?.

ஆனாலும் காஸாவில் வேலை எதுவும் இல்லாததால், அவர்கள் இஸ்ரேலுக்கு வேலைக்கு வந்து சென்று கொண்டு இருக்ககூட அனுமதித்தது. அதுமட்டுமல்ல உலக நாடுகள் கோடி கோடியாக கொட்டிய போதும், அது மக்களுக்கு கிடைக்காததால் இஸ்ரேல் தான் அவர்களுக்கு, தண்ணீர், உணவு, மருந்து, மருத்துவம் என்ற அடிப்படை கட்டமைப்புகளை கொடுகிறது.

அப்படிப்பட்ட சூழலில், இந்தியா I2U2 மூலம் இஸ்ரேல், சவூதி அரேபியா, UAE போன்ற நாடுகளுடன் பேசி, பாலஸ்தீனத்துக்கு ஒரு நாடு அமைக்கவும், அதை இனிமேல் தீவிரவாதத்துக்கு பயன்படுத்தாமல் இருக்கவும் ஒரு பேச்சுவார்த்தையை நடத்தியது. அதில் UAE உட்பட சில நாடுகளுடன் ஒப்பந்தம் முடிந்தது, சவூதியுடன் இப்போது ஒரு புரிதல் வரும் நிலையில் இருக்கிறது.

அப்படிப்பட்ட ஒரு ஒப்பந்தம் வெறும் வாய்வழியாக மட்டும் இல்லாமல், பொருளாதார ரீதியில் ஒருவரை சார்ந்து ஒருவர் இருக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் கொண்டுவரப்பட்ட முக்கிய திட்டம் என்பது IMEC என்ற திட்டம். அந்த திட்டம் நிறைவேறி விட்டால் இஸ்ரேல் மட்டுமல்ல, முஸ்லீம் நாடுகளின் பொருளாதாரமும் பலமாகி விடும். அதே சமயம், சீனாவின் Belt & Road Initiative (BRI) என்பது பயனற்று போய் விடும் என்பது சீனாவிற்கான மிகப்பெரிய பிரச்சினை.

அந்த IMEC இல் சீனா, ஈரான், துருக்கி போன்ற நாடுகள் அதில் இல்லை என்பது மிக முக்கிய காரணம் என்பதும், இப்போது ரஷ்ய-உக்ரைன் போரில் G7 நாடுகள் இருப்பதால் அதைவிட்டு இஸ்ரேலுக்கு முழுவதும் வர முடியாது என்பதும், அமெரிக்காவின் தென் சீனக்கடலில் உள்ள கப்பற்படை இஸ்ரேலுக்கு வந்தால், அதன் மூலம் தைவானை நாம் பிடிக்க முடியும் என்பது போன்ற பல காரணங்கள் இதில் இருக்கிறது.

இந்தியா- சீனா இடையேயான தனிப்பட்ட உரசல்களும் இதில் அடக்கம். இதில் முக்கியமான ஆயுத உதவிகளை செய்தது, ஈரான் வழியாக சீனா, துருக்கி, ரஷ்யா போன்ற நாடுகள். அதுமட்டுமல்ல இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்த ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கா வேண்டுமென்றே விட்டுச் சென்ற ஆயுதங்கள், துருக்கிக்கு பிளாக் மார்க்கெட் வழியாக ஹமாஸ்க்கு வந்து சேர்ந்திருக்கிறது.

இந்த சூழலில் திடீரென கடுமையாக தாக்குவதில் இஸ்ரேல் குழம்பிப்போகும். தனது முழு கவனத்தை காஸாவில் செலுத்தும். அப்போது வடக்கில் இருந்து ஹிஸ்புல்லா, சிரியா, மற்றும் சில தீவிரவாத குழுக்கள் மூலம் இஸ்ரேலுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தலாம். அதன்பின், ஈரானை களத்தில் இறக்கலாம் என்பது அவர்கள் கணக்கு.

ஆனால் இந்த தாக்குதலில் இஸ்ரேல் குழப்பமடையாமல் இந்தியாவும், அமெரிக்காவும் தடுத்து விட்டன. இஸ்ரேல் பலமுனை தாக்குதலை முறியடிக்க யாரும் எதிர்பார்க்காமல், அமெரிக்கா தனது கடற்படையை மத்தியதரை கடலுக்கு கொண்டு வந்தது. இப்போது லெபானில் இருந்து ஹிஸ்புல்லாவோ அல்லது சிரியாவில் இருந்தோ, ஈரானில் இருந்தோ தாக்கினால் வேறு யாராவது தாக்கினால் அவர்களை அமெரிக்கா, இங்கிலாந்து கடற்படை பார்த்துக்கொள்ளும்.


அதனால் திட்டமிட்டபடி இஸ்ரேலை தாக்க முடியாமல் ஹிஸ்புல்லா பின்வாங்கியது. ஹிஸ்புல்லா இஸ்ரேலை அடித்தால் ஹிஸ்புல்லாவை மட்டுமல்ல, ஈரானையும் சேர்த்து அமெரிக்கா தாக்கும் என்பது தான் இங்கு வைக்கப்பட்ட செக். இதனால் இப்போது அநாதையாக நிற்கிறது ஹமாஸ் இயக்கம். இதனால் இஸ்ரேல் போர்க்களத்தில் ஹமாஸை புரட்டி எடுத்து வருகிறது. ஹமாஸை முடித்த பின்னர் இஸ்ரேல் அடுத்து தனது பரம எதிரியான ஈரான் மீது தாக்கும்.

இந்த தாக்குதலை எதிர்பார்த்து சவுதி அரேபியா காத்திருக்கிறது. காரணம் ஈரான் அடி வாங்கினால், அதனால் அதிகம் லாபம் அடையப்போவது சவுதி அரேபியா தான். இந்த நிலையிலும் காஸாவின் எல்லையைக் கூட மூடி யாரும் உள்ளே நுழையக்கூடாது என்று தடுக்கிறது எகிப்து. அதுவும் அந்த மக்கள் தன்னை தாக்கமாட்டார்கள் என்று தெரிந்தும் துருக்கி அனுமதிக்காத போது, இஸ்ரேல் மட்டும் தனது எல்லையை எப்படி திறந்து விடும். இதனால் ஹமாஸை ஆதரித்த காரணத்திற்காக காசா மக்களும் சிக்கலில் சிக்கி தவிக்கின்றனர். இன்று மட்டுமல்ல சிரியா போர், ISIS பிரச்சனை என ஒவ்வொரு பிரச்சினை வந்த போதும் காசா மற்றும் பாலஸ்தீன மக்களை எந்த ஒரு இஸ்லாமிய நாடும் அனுமதிக்கவில்லை. ஆனால் ஐரோப்பிய நாடுகள் அனுமதித்தன.

இஸ்ரேலுக்கு எதிராக அத்தனை தாக்குதலை செய்த ஹமாஸ், இன்று மக்களை கேடயமாக பயன்படுத்தி தெற்கு காசா பகுதிக்கு போக வேண்டாம் என்று தடுக்கிறது. அதாவது, அங்கே தங்களை தாக்கினால் மக்கள் அழிவார்கள். அதை வைத்து தற்காத்துக் கொள்ளலாம் என்பது தானே அதன் நோக்கம்? ஹமாஸ், ஹிஸ்புல்லா இயக்கங்களில் 2.20 லட்சம் பேர் உள்ளனர். இவர்களை துாண்டி விட்ட நாடுகள் ஆரம்பத்தில் விடுத்த மிட்டல்களுக்கு எல்லாம் இஸ்ரேல் அசரவில்லை.

அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட ஐரோப்பிய நாடுகள் அத்தனையும் இஸ்ரேலுக்கு ஆதரவாக களத்தில் துணிந்து நிற்கின்றன. ஹமாஸையும், ஹிஸ்புல்லாவையும் துாண்டி விட்ட நாடுகள் தற்போது விலகிய தோரணையில் பேசுகின்றன. கிட்டத்தட்ட கை விட்டு விட்டனவோ என்ற சூழல் நிலவுகிறது. ஆக ஹமாஸ், ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேலிடம் தனியே சிக்கி உள்ளனர். இவர்கள் அத்தனை பேரையும் தனது தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளது இஸ்ரேல். எப்படியும் இவர்களை விடவே விடாது என்ற உலக போர்ச் சூழல் குறித்து ஆய்வு செய்து தரும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்..

Tags

Next Story