இந்தியாவுக்கு பிரான்ஸ் 8ஆக்சிஜன் தயாரிப்பு இயந்திரம் தருது
X
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் மற்றும் பிரதமர் மோடி (பழைய படம்)
By - K.Madhavan, Chief Editor |27 April 2021 4:45 PM IST
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்தியாவுக்கு பிரான்ஸ் 8ஆக்சிஜன் தயாரிப்பு இயந்திரம் தந்து உதவ ஒப்புக்கொண்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு உதவ தயாராக உள்ளன. சீனா, சவுதி அரேபியா, ஈரான், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் உதிவி செய்ய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. இந்நிலையில் பிரான்ஸ் 8ஆக்சிஜன் தயாரிப்பு இயந்திரங்களை வழங்க முடிவு செய்துள்ளது.
ஒரு இயந்திரம் 250படுக்கைகள் கொண்ட ஒரு ஆஸ்பத்திரிக்கு தங்கு தடையில்லாமல் ஆக்சிஜன் கிடைக்க வழிவகை செய்யும். மேலும் 28வென்டிலேட்டர்கள்,200எலெக்ட்ரிக் சிரிஞ்ச் பம்புகள் போன்றவற்றை இந்த வாரத்தில் முதல் தவணையாக அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu