கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை திடீர் நிறுத்தம்

கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை திடீர் நிறுத்தம்
X

இலங்கையில் Astrazeneca தடுப்பூசியை இம்மாத இறுதியில் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்ப்பதாகவும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டார்.எப்படியாவது ஜனவரி 29 ஆம் தேதி தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டவர்களுக்கு ,இரண்டாவது தடுப்பூசி ஏற்றுவதற்காக 2,36,000 தடுப்பூசிகள் எஞ்சியுள்ளதாகவும் அவர் கூறினார்.

நாட்டில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நேற்று முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக COVID-19 கட்டுப்பாடு தொடர்பான அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.Astrazeneca தடுப்பூசி ஏற்றுமதியை இந்தியா தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதால், நாட்டில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, Oxford astrazeneca தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காக இந்தியாவின் Serum நிறுவனத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என மருந்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!