'எங்க நாட்டில் இருந்து கொரோனா பரவவில்லை; அமெரிக்காவில் இருந்துதான்'- சீனா சர்ச்சைக் கருத்து
வூகான் இன்ஸ்டிடியூட் மாதிரி படம்.
அமெரிக்காவில் உள்ள 5 மாகாணங்களில் 7பேருக்கு கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்னரே கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது என்று சீன தோல்நோய் நிபுணர் செங் குவாங் புதிய கருத்தை வெளியிட்டுள்ளார்.
சீனாவின் நோய்த்தடுப்பு அமைப்பின் தலைவராக இருந்து வரும் அவர் அமெரிக்க தேசிய சுகாதார இன்ஸ்டிடியூட் நடத்திய ஆராய்ச்சியில் கலந்து கொண்டார். அவரது முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. தற்போது அவரது அந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதனை அடுத்து சீன வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் சோ லீஜியான்,அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். செங் குவாங் சமர்ப்பித்த ஆராய்ச்சி அறிக்கையின்படி, கொரோனா வைரஸ் பரவலுக்கு உலகிலுள்ள பல நாடுகளில் சோதனை நடத்தப்பட வேண்டும்.கொரோனாவுக்கு சீனா மட்டுமே காரணம் என்று கூறக்கூடாது என்று கூறியுள்ளார்.
சீனாவின் வூகான் நகரில் உள்ள உயிரியல் ஆய்வு கூடத்தில் இருந்த வவ்வாலின் சாம்பல் கழிவில் இருந்து வைரஸ் பரவியதாக உலகமே நம்பிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இந்த ஆராய்ச்சி முடிவு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2019ம் ஆண்டில் அமெரிக்க குடிமக்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருந்த நிலையில் உலகம் முழுக்க கொரோனா வைரஸ் உருவாக பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்று கருதக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த கருத்தால் கொரோனா வைரஸ் பரவியது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகள் உலக உயிரியல் போர் நடத்தும் நாடுகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று மறைமுகமாக அமெரிக்காவை கைநீட்டி சீன வெளியுறவுத்துறை கருத்து வெளியிட்டிருக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu