அதல பாதாளத்தில் விழுந்த சீனாவின் பொருளாதார வளர்ச்சி

அதல பாதாளத்தில் விழுந்த சீனாவின் பொருளாதார வளர்ச்சி
X

சீன அதிபருடன் பிரதமர் மோடி 

சீனா உலகத்தின் உற்பத்திக்கூடம் என்று வர்ணிக்கப்பட்ட நாடு. அதன் உண்மையான வளர்ச்சி சற்றேரக்குறைய வெறும் 0.9% என்றாகி விட்டது

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கோவிட் என்ற பெருந்தொற்று வந்ததும், உலகமே நடுங்கி, ஒடுங்கிப்போனது. உலகின் வல்லரசு நாடுகள் கோவிட்டுக்கு தடுப்பூசி தயாரித்தது. அதை வைத்து உலகத்தையே கட்டுப்படுத்தலாம் என மேற்கத்திய நாடுகள் கனவு காண, அதற்கு இணையாக தானும் ஒரு தடுப்பூசி தயாரித்து அறிவித்தது சீனா.

ஏழை நாடுகள் பெரும் கடன் என்ற மேற்கத்திய நாடுகளிடம் தடுப்பூசிக்காக விழ வேண்டிய சூழலில், சீனாவின் தடுப்பூசி சீப் அண்ட் பெஸ்ட் என்றது சீனா. வாங்கி பயன்படுத்தியபின் அது வழக்கம்போல சீன தயாரிப்பு என்று அதன் தரம் பல்லிளித்தது.

அப்போது மேற்கத்திய நாடுகள் கொண்டாட ஆரம்பிக்க, யாரும் எதிர்பாராத நேரத்தில் இந்தியா தடுப்பூசியை அறிமுகப்படுத்தியது. அதை தடுக்க மேற்கத்திய நாடுகள் ஒருபக்கம், சீனா மறுபக்கம், இந்திய எதிர்கட்சிகளும், மீடியாவும் ஒருபக்கம் என்று பலமுனை தாக்குதலை முறியடித்தது இந்தியா.

இந்தியா தான்மட்டும் பயன்படுத்தாமல், உலக நாடுகளுக்கு, குறிப்பாக ஏழை நாடுகளுக்கு இலவசமாக கொடுத்து மேற்கத்திய நாடுகளின் தடுப்பூசி மூலம் கொள்ளையடிக்கும் ராஜ்யத்தை முறியடித்தது.

அதனால் அசிங்கப்பட்ட சீனா, எத்தனை முறை அதன் தடுப்பூசியை மேம்படுத்தினால் கோவிட் பரவலை தடுக்க முடியவில்லை. அதற்கு மாறாக இந்தியாவிடமோ, மேற்கத்திய நாடுகளிடம் தடுப்பூசியை வாங்க அதன் கௌரவம் அனுமதிக்கவில்லை.

விளைவு தடுக்க முடியாத கோவிட் பரவல். அதற்காக மீண்டும், மீண்டும் ஊரடங்கு, ஜீரோ கோவிட் பாலிஸி, உலகின் உற்பத்தி கூடத்தை மூடவைத்தது. அதனால் சீனாவை சார்ந்திருந்த உலகம் ஸ்தம்பித்துபோனது

அதனால் சீனா அந்த கோவிட்டிலிருந்து வெளிவருவதற்கு முன்பு, அந்த இடைவெளியில் அதற்கு மாற்றாக இந்தியா, வியட்நாம், தாய்லாந்து நாடுகள் மாற்றாக உற்பத்தி செய்ய தொடங்கியது. அதில் ஐஃபோன் முதல் டாய்லெட் பேப்பர் வரை சீனாவின் சீப் ட்ரிக்ஸ் நமத்துப்போனது.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக கோலோச்சிய சீனாவின் பொருளாதாரம், அதனால் உலகத்தின் முதலீடுகள் வெளியேறியது. அதனால் அதை தடுக்க, அதன் பொருட்களை வாங்க ஆள் இல்லாவிட்டாலும் உற்பத்தியை கூட்டி அதன் GDP வீழாமல் பார்த்துக்கொண்டது.

உற்பத்தி அதிகரித்து, பொருட்களை குவிந்தது, ஆனால் வாங்க ஆளில்லை. அதனால் பொருட்களின் விலையை குறைத்து கூவிக்கூவி கொடுக்க, மற்ற நாடுகளில் அது டம்ப் செய்தது. அதன் மூலம் அங்கே உற்பத்தி செய்யும் தொழில்களை முடக்கி, பின்னால் தன் வசம் கைவசப்படுத்துவதுதான் அதன் நோக்கம்.

அதை தடுக்க இந்தியா சீனாவிடம் இருந்து வந்த அந்த பொருட்களுக்கான வரிவிதிப்பை 100% வரை செய்ய, அந்த பொருட்களை மலிவு விலை விற்பனை திட்டம் அடிபட்டு போனது. அதனால் ஒரு நிலைக்கு மேலே வாங்க ஆள் இல்லாததால் நிறுவனங்கள் முடங்கியதும் 48% அதன் பொருளாதாரத்தை ஆக்கிரமித்த அதன் ரியல் எஸ்டேட் வீழ்ந்தது. வேலைவாய்ப்புகள் வீழ்ந்தது.

அந்த நிலையில் அமெரிக்க, ஐரோப்பியாவும் இந்தியாவை பின்பற்றி Anti-Dumping வரி விதிக்க, சீனாவின் பொருட்கள் ஒரு பக்கம், விலை அதிகமானது, மறுபக்கம் அதன் தடுப்பூசிபோல தரம் குறைந்தது.

அதனால் அதன் ரியல் எஸ்டேட் முதல் ஸ்டீல் கம்பெனி வரை ஒன்றன் பின் ஒன்றாக வீழ ஆரம்பித்தது. இன்றைய நிலையில் அதன் GDP வளர்ச்சி 5.1% டார்கெட் என்று எல்லை வைத்திருந்தாலும், 4.2% தான் உண்மை என்று பூசி மெழுகினாலும், அதன் உண்மையான வளர்ச்சி சற்றேரக்குறைய வெறும் 0.9% என்றாகி விட்டது. அதுகூட உண்மையல்ல என்பதை உலகமறியும்.

அதனால் சீனாவின் வீழ்ச்சி, அதை மறைக்க ஒரே வழி உலகத்தில் போர்கள். அதற்கு ஈரானுக்கும், ரஷ்யாவிற்கும் உதவுகிறது. ஏனென்றால் அதனால் தைவானை போரில் வீழ்த்த அதன் டுபாக்கூர் ராணுவத்தின் மீது நம்பிக்கையில்லை.

இந்த நிலையில் சீனாவிற்குள்ள ஒரே வாய்ப்பு அதற்கு போட்டியாக இருக்கும் நாடுகளை அழிப்பது என்பதுதான். அதனால் இந்தியாவுடன் எல்லையில் அத்துமீறியது. ஆனால் அங்கேயும் அடி வாங்கி நிற்கிறது.

அடுத்து அது கடன் கொடுத்த கைக்குள் வைத்திருந்த நாடுகளுக்கு அதனால் மேலும் கடன் கொடுக்க முடியாததால் அந்த நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக திவாலானது. அதற்கு ஹம்பந்தோட்டா, பாகிஸ்தான், ஆஃப்ரிக்கா என்று துறைமுகங்களை கைப்பற்றியது. OBOR என்று சில்க் ரோட்டை உலகளவில் கட்டியது.

ஆனால் அதைவைத்து அதன் எல்லையை விஸ்தரிக்க, அதன் தொழில்கள் இல்லாமல் என்ன செய்ய? ஒவ்வொன்றாக வீழ, சீனாவில் ரியல் எஸ்டேட் வங்கிகள், ஸ்டீல் உற்பத்தி என்று ஒவ்வொன்றாக வீழத் தொடங்கி விட்டது.

இப்போது அதற்கு இருக்கும் ஒரே நம்பிக்கை மூன்றாம் உலகப்போர் அல்லது பிரிக்ஸ் கரன்சி. அதைவைத்து டாலருக்கு மாற்றாக யுவானை பயன்படுத்த நினைக்க, இந்தியா அனுமதிக்க மறுத்தது.

இன்றைய நிலையில் டாலருக்கு மாற்றான பிரிக்ஸ் கரன்ஸி வந்தாலும், அதன் அடிப்படை பலமே பொருளாதாரம். ஆனால் அது அவசரப்பட்டு, தான் உலகின் மிகப்பெரிய மார்க்கெட்டான அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை பகைத்துக்கொண்டு ரஷ்யாவுடன் கைகோர்த்தது. அதனால் அதன் மார்க்கெட் மீண்டும் எழ வாய்ப்பு குறைந்து விட்டது.

அதே சமயம் இலங்கை, பாகிஸ்தான், ஆப்ரிக்க நாடுகள் என்று ஒவ்வொரு நாட்டிலும், லஞ்ச லாவண்யங்களால், முறையில்லாமல் இயற்கை வளங்களை திருடியது. அந்த நாடுகள் விழித்துக் கொண்டது அல்லது வீழ்ந்துபோனதால் அதனால் அதையும் பயன்படுத்த முடியவில்லை.

ஆனால் ஒவ்வொரு இடத்திலும் பெரிய முதலீடுகளை அவர்கள் தலையில் கடனாக கட்டினாலும், அதை திருப்பி செலுத்தும்.நிலையில் அவை இல்லை என்பதால், எல்லா வகைகளிலும் சீனாவின் ஆக்டோபஸ் கரங்கள் வீழ்ந்து வருகிறது.

ஆனா அதன் தவறுகள் மூலம் எந்த பாடமும் கற்கவில்லை. ஈரானில் 400 பில்லியன் முதலீடு செய்து, அதனிடம் இருந்து நீண்டகால ஒப்பந்தம் போட்டு 50டாலர் விலையில் கச்சா எண்ணெய் வாங்கியது. அதுமட்டுமல்ல, ஈரானில் இருந்து ஒரு பைப் லைன் மூலம் பாகிஸ்தான், காஷ்மீர் வழியாக ஒரு பைப்லைன் போட்டு வருகிறது. அதன் மூலம் முதலில் பாகிஸ்தானில் ஒரு மிகப்பெரிய துறைமுகம், மிகப்பெரிய விமான நிலையம் அமைத்தது. ஆனால் அதை பயன்படுத்த பலூசிஸ்தான் ராணுவம் அனுமதிக்கவில்லை. விளைவு மிகப்பெரிய முதலீடு வீணாக போய்விட்டது.

இந்த நிலையை ரோடு வழியாக பாகிஸ்தானை காஷ்மீர் வழியாக இணைக்கும் அந்த ரோடு, நாளை இந்தியா கைவசம் போனால் என்னாவது? அதற்காக இப்போது ஆஃப்கானிஸ்தான் வழியாக ஈரானை இணைக்கும் ஒரு வழிக்கு முதலீடு செய்ய தயாராகி வருகிறது.

ஆனால் சீன மக்கள் தங்கள் முதலீடுகளை ரியல் எஸ்டேட்டில் போட்டு, அந்த வங்கிகள் ஒன்றன் பின் ஒன்றாக திவால் ஆகிவருகிறது. கட்டாத வீட்டுக்கு மாதத்தவணை எதுக்கு என்ற மக்களின் போராட்டம். மாணவர்கள் போராட்டம் ஒருபக்கம், மறுபக்கம் வேலை இல்லாத மக்கள்.

ஆனால் சீனா வெளி நாடுகளில் செய்யும் முதலீடுகள் மக்களை கோபத்துக்கு உள்ளாக்கி வருகிறது. முன்பெல்லாம் பிரச்சினை வந்தாலும், அவர்களுக்கு பொருளாதார பிரச்சினை இல்லை, ஆனால் இன்றைய நிலை அப்படியா?

அதனால் அதற்கு மாற்றாக உலகம் முழுவதும் மீடியாக்களை கையில் போட்டுக்கொண்டு, அங்கே இருக்கும் ஊழல்வாதிகள் மூலம் எதிரி நாடுகளில் உள்நாட்டு பிரச்சினையை ஏற்படுத்த நினைத்த சீனாவிற்கு தனது நாட்டில் மாணவர்களும், மக்களும் போராடுவதை தடுக்க வழிதெரியவில்லை.

சீனாவிற்கு வேறு வழியே இல்லையா?

தாம் செய்த தவறுகளை சரி செய்ய முடியாத அளவிற்கு அது மோசமானது. ஆனால் அந்த தவறை இனிமேல் செய்யாமல், நாடுபிடிக்கும் ஆசையை துறந்து விட்டு, தானெல்லாம் வல்லரசுக்கான போட்டி இல்லை என்பதை உணர்ந்து, மற்ற நாடுகளுடன் சுமூக உறவை வளர்த்து ஆரோக்கியமான போட்டியுடன் வாழ்ந்தால் சீனா வீழாது. ஆனால் தப்பு செய்து வாழ்ந்து பழகியவனுக்கு, அதன் ருசி அலாதி என்பதால் அதிலிருந்து வெளிவருவது எளிதல்ல.

அதனால் சீனா இப்போது 50 ஆண்டுகளாக இஸ்லாமிய பயங்கரவாதத்தை பயன்படுத்திய அமெரிக்காவின் டெக்னிக்கை பயன்படுத்த துவங்கியுள்ளது. அதனால் ஈரான் என்ற நொண்டி குதிரை மீது மீண்டும் பந்தயம் கட்டி விட்ட காசை பிடிக்க பார்க்கிறது. ஆனால் வீழ்ந்து போனால், சேர்ந்து வாழமுடியாது என்ற உண்மை அதற்கு புரியவில்லை.

இன்று அதற்கு மூன்றாம் உலகப்போர் தேவை. ஆனால் அது அந்த போரில் இறங்காது. ஈரானை உசுப்பி விட்டு வாழ நினைப்பதால் வீழ்ச்சி வேகமாகிறது!

கெடுவான் கேடு நினைப்பான்! சீனா நினைத்தது, வீழ்கிறது!

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது