ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை : புகையுடன் பகை ஏற்படுத்த கனடா முயற்சி..!

எச்சரிக்கை முத்திரை.(கோப்பு படம்)
Canada puts warning label on each cigarette in tamil, Canada puts warning label on each cigarette, Cigarettes cause impotence, poison in every puff of Cigarette, Health Warning
ஆகஸ்ட் 1ம் தேதி முதல், கனடாவில் விற்கப்படும் ஒவ்வொரு சிகரெட்டிலும் "புகைபிடித்தல் ஆண்மைக்குறைவையும்,புற்று நோயையும் உண்டாக்குவதுடன் ஒவ்வொரு பஃப்பிலும் விஷம் உள்ளது" என்ற தனிப்பட்ட மருத்துவ எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று புதிய நெறிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.
கனடாவில் விற்கப்படும் ஒவ்வொரு சிகரெட்டிலும் மேற்குறிப்பிடப்பட்டுள்ள எச்சரிக்கையை சிகெரெட் தயாரிக்கும் நிறுவனங்கள் குறிப்பிடவேண்டும் என்ற புதிய சட்டவிதிகள் உருவாக்கப்பட்டுளளதுடன் அது ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டவிதியை கனடா மே மாதம் முதன்முதலில் அறிவித்தது. உலகிலேயே இந்த புதிய விதிமுறையை அமல்செய்த நாடு கனடாவாகத்தான் இருக்கும்.
புதிய தனிப்பட்ட இந்த எச்சரிக்கை லேபிள்கள் கொண்ட கிங் சைஸ் சிகரெட்டுகள் ஒரு வருடத்திற்குள் கடைகளில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து 2025ம் ஆண்டின் தொடக்கம் முதல் வழக்கமான அளவு சிகரெட்டுகள் மட்டுமே கிடைக்கும்.
எச்சரிக்கை லேபிள்கள் "கிட்டத்தட்ட தவிர்க்க முடியாதவை. மேலும் ஒவ்வொரு சிகரெட்டிலும் காண்பிக்கப்படும் புதுப்பிக்கப்பட்ட கிராஃபிக் படங்களுடன், புகைபிடிப்பதால் ஏற்படும் தீங்குகள் பற்றிய உண்மையான மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்" என்று கனடாவின் முன்னாள் போதைப்பொருள் அமைச்சர் கரோலின் பென்னட் ஏற்கனவே கூறியிருந்தார்.
கனேடிய அரசாங்கம் குறிப்பிட்டது, குறிப்பாக புகையிலைக்கு அடிமையாகும் அபாயத்திற்கு ஆளாகக்கூடிய சில இளைஞர்கள், பாக்கெட்டில் இருக்கும் எச்சரிக்கையை பார்ப்பதை தவிர்த்து பாக்கெட்டில் இருந்து ஒற்றை சிகெரெட்டை எடுத்து புகைக்கிறார்கள். ஆகவே, ஒவ்வொரு சிகெரெட்டிலும் அந்த அச்சத்தை ஏற்படுத்தும் மருத்துவ எச்சரிக்கைகள் இருப்பது அவசியம் என்று கனடா அரசு தெரிவித்துள்ளது.
2000-ம் ஆண்டில், புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் உடல்நலக் கேடுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, சிகரெட் பாக்கெட்டுகளில் கிராஃபிக் எச்சரிக்கைகளை - நோயுற்ற இதயங்கள் மற்றும் நுரையீரல்களின் கொடூரமான படங்கள் உட்பட - கிராஃபிக் எச்சரிக்கைகளை பதிவிடவேண்டும் என்ற உத்தரவை வழங்கிய முதல் நாடு கனடா ஆனது. கடந்த இருபது ஆண்டுகளில் கனடாவில் புகைபிடித்தல் குறைந்து வருகிறது.
ஆனால், அரசு தரவுகளின்படி, புகையிலை பயன்பாடு ஒவ்வொரு ஆண்டும் 48,000 கனடியர்களைக் கொல்கிறது. மேலும் நாட்டின் மருத்துவம் மற்றும் சுகாதார செலவுகளில் கிட்டத்தட்ட பாதி போதைப்பொருள் பயன்பாட்டுடன் தொடர்புடையதாக இருக்கிறது.
நாட்டின் தலைநகர் ஒட்டாவாவில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையை 2035 ஆம் ஆண்டிற்குள் ஐந்து சதவீதமாக அல்லது சுமார் இரண்டு மில்லியன் மக்களாகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது அது 13 சதவீதமாக உள்ளது.
இந்தியாவிலும் புகைபிடித்தல் எச்சரிக்கை ?
இந்தியாவிலும் புகை பிடிக்கும் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்த நடைமுறை நம் நாட்டிலும் வந்தால் புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்கும் இளைஞர்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம்.ஒரு நாட்டின் நாளைய எதிர்காலம் இன்றைய இளைஞர்கள் கையில் உள்ளது என்பதை உறுதிப்படுத்த இதைப்போன்ற தீங்கு விளைவிக்கும் போதை பழக்கங்களில் இருந்து விடுபட விழிப்புணர்வு அவசியம் தேவை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu