அமெரிக்காவை பதற செய்த பிரிக்ஸ் 11வது மாநாடு..!
பிரிக்ஸ் நாடுகள்
அமெரிக்கா இந்த பிரிக்ஸ் மாநாட்டால் அதிர்வது ஏன்...????
இன்றைய முன்னணி பொருளாதார வளர்ச்சி விகிதாச்சாரத்தை கொண்ட ஆனானப்பட்ட அமெரிக்காவின் செல்வாக்கை இது அசைத்து பார்த்து இருக்கிறது. அதன் அஸ்திவாரத்தை... உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அவர்களால் கட்டமைப்பு செய்து வைத்திருக்கும் டாலரை, காலப் போக்கில் இது மாற்றீடு செய்து விடும் என அஞ்சுகின்றனர் மேற்கு உலக வாசிகள்.
இன்றைய தேதியில் அமெரிக்கா முன்னணி பொருளாதார வளர்ச்சி கண்ட நாடாக.... உலக அளவில் முதன்மை பெற்ற நாடாக.... காட்சிப் படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் அவை பெரும்பாலும் பொய்த் தோற்றம், கட்டமைக்கப்பட்ட பிம்பம் என்கிறார்கள். இதனை வைத்து இல்லாத அழிச்சாட்டியம் எல்லாம் செய்து கொண்டு இருக்கிறது அமெரிக்கா., என்பது இவர்களின் வாதம்.
எப்படி... அமெரிக்கர்களுக்கு, அதன் அகங்காரத்திற்கு தீனி போடுகிறது அதன் கரன்சி தான். ஆனால் அதனை சகட்டு மேனிக்கு அச்சடித்திருக்கிறார்கள். உலகளாவிய வர்த்தகத்திற்கு தங்கம் அந்நாளில் பொதுப் பயன்பாட்டில் இருந்த காலத்தில்.... உலக பொருளாதார பங்களிப்பில் சுமார் 22% நம் இந்திய தேசம் கொண்டிருந்தது. அது போல் சீனா உச்ச பட்சமாக 24.8% பங்களிப்பை கொண்டிருந்தன. ஆனால் இன்று நம் இந்திய தேசம் வெறும் ஒற்றை இலக்க எண்களில் துவண்டு நிற்கிறது. சீன தேசம் 13.2% எனும் அளவில் திணறிக்கொண்டிருக்கிறது.
ஆக சுலபமாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் முன் ஒரு காலத்தில் உலக அளவிலான பொருளாதார பங்களிப்பில் மேற்சொன்ன இரண்டு நாடுகளும் சேர்ந்து சுமார் 45% வைத்திருந்த நிலையில் இன்று இந்த இரண்டு நாடுகளும் சேர்ந்தே இருபது சதவிகிதத்திற்கும் கீழே துவண்டு நிற்கிறது.
இன்றைய தேதியில் உலக மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் இந்த இரு நாடுகளில் அடங்கி விடும் நிலையில்.... நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர் அதிகம் கொண்ட நாட்டின் உலக பொருளாதார பங்களிப்பு வெறும் இருபது சதவிகிதத்திற்கும் கீழே இருப்பது...... ஏதோ இடிக்கவில்லை...
மேற்சொன்ன விஷயம் உதாரணத்திற்கு மட்டுமே. இதில் அமெரிக்கா எங்கே வருகிறது. இரண்டாவது உலகப் போரின் கடைசி கட்டத்தில் உள்ளே வந்த அமெரிக்கா..... தனது ராணுவ மற்றும் ஆயுத பலத்தை பிரகடனம் செய்து பெரும் பணக்கார தேசமாக பறை சாற்றி கொண்டது பின்னாளில். அதனை தக்கவைத்துக் கொள்ள அவர்களின் கரன்சியை உலக நாடுகள் ஏற்கும் படி செய்து வைத்திருக்கிறார்கள். இதற்கு உலக அளவிலான பயன்பாட்டில் முதல் இடத்தை பெறும் பெட்ரோலியத்தை.... கச்சா எண்ணெய் வர்த்தகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டு அதனை டாலரில் வர்த்தகம் செய்ய கண்களுக்கு தெரியாத வலைப் பின்னல் ஒன்றையும் ஏற்படுத்தி வைத்து அதில் வெற்றி கண்டு இருக்கிறார்கள்.
நம்மில் பலருக்கு தெரியாத சங்கதி ஒன்று உள்ளது இங்கு. உலகளாவிய கச்சா எண்ணெய் கிடைக்கும் நாடுகளில் முதல் இடத்தில் இருப்பது இன்று நாம் பார்க்கும் மத்திய கிழக்கு நாடுகள் அல்ல. அது மாத்திரமல்ல முதல் நான்கு இடத்திலும் கூட மத்திய கிழக்கு நாடுகள் ஏதும் வரவில்லை என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.???? ஆனால் அமெரிக்கா அந்த முதல் நான்கு இடத்தில் ஒரு நாடாக இருக்கிறது.
அடுத்த அதிர்ச்சி தரும் விஷயம்... அமெரிக்கா தான் மத்திய கிழக்கு நாடுகளின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் முதல் இடத்தில் வரும் நுகர்வோர். அவர்கள் நாட்டிலேயே அதிகப் படியான எண்ணெய் வளம் இருக்கும் போது ஏன் வெளியே எண்ணெய் வாங்க வேண்டும்....???
காரணம் உற்பத்தி செலவு. மத்திய கிழக்கு நாடுகளில் ஒரு ரூபாய்க்கு கிடைக்கும் விஷயம் அமெரிக்காவில் எட்டு ரூபாய்க்கு மேல் என்றால்..!!! சரி... அதற்கும் டாலருக்கும் என்ன சம்பந்தம்!!!
அமெரிக்கா தனது அதிநவீன தொழிற்சாலை மற்றும் தொழில்நுட்ப பண்புகளை கொண்டே மத்திய கிழக்கு நாடுகளில் பெருமளவு எண்ணெய் வயல்களை வளைத்து பிடித்து வைத்திருக்கிறார்கள். அதன் மூலம் டாலரில் வியாபாரம் செய்கிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்தால் அது தவறு. இதில் மறைமுகமாக சூதாட்டம் ஒன்று நடக்கிறது. எப்போதெல்லாம் டாலர்களின் தேவை, தட்டுப்பாடு அங்கு அமெரிக்காவில் நிலவுகிறதோ அப்போதெல்லாம்..... அமெரிக்க அரசாங்கம் வங்கிகள் மூலம் கடனுக்கு டாலர்களை அச்சடித்து புழக்கத்தில் இறக்கி விடும். மேலோட்டமாக பார்த்தால் இதில் தவறு ஏதும் இருப்பதாகத் தெரியாது.
ஆனால் டாலருக்கு நிகரான தங்கம் இருப்பு இருப்பதற்கு பதிலாக திரவ தங்கமான கச்சா எண்ணெய் மீது இருப்பாக காண்பித்து பூச்சாண்டி காட்டி விடுகிறார்கள். இப்படி சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறதா பாருங்கள்...
நீங்கள் ஒரு இடத்தை.... ஒரு கிரவுண்ட் இடத்தை வாங்குவதாக எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மதிப்பு நீங்கள் வாங்கும் போது இரண்டு லட்சம். பிறகு உங்கள் பணத் தேவைக்காக அதனை அடகு வைத்து மூன்று லட்சம் கேட்டால்..... கிடைக்குமா என்றால் இடத்தின் மதிப்பு உயர்ந்திருந்தால் இது சாத்தியப்படும். இருபது லட்சம் கேட்டால்...... அப்போதும் அதே கதை தான்., அந்த இடம் அதீத வளர்ச்சி கண்டு இருந்தால் அதுவும் சாத்தியமே.
இங்கு அதீத வளர்ச்சி என்பது அதிக நுகர்வோருக்கான தேவையாக புரிந்து கொண்டு மேற்சொன்ன பெட்ரோலியத்தை பார்த்தால்.... அப்படி ஒரு நரித்தந்திர வேலையை தான் காலங் காலமாக அமெரிக்கா பார்த்து கொண்டு இருக்கிறது.
கச்சா எண்ணெய் வர்த்தகத்தை விலை ஏற்றம் மற்றும் உற்பத்தி குறைப்பு என ஏகத்திற்கும் புகுந்து விளையாடி வருகிறது. இதன் மூலம் டாலரின் தேவையை அதன் மதிப்பை சமன் செய்து வருகிறது. இதற்காக எந்த எல்லைக்கும் செல்ல அவர்கள் தயங்கியதே இல்லை. அதற்கு உதாரணம் தான் மேற்சொன்ன மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அதிகாரப் போட்டி. இப்படி நயவஞ்சகமாக கழுத்தை அறுக்கும் வேலையில் கைதேர்ந்த சூராதிசூரர்கள் அமெரிக்க புலனாய்வு பூனைகள்.
அமெரிக்காவில் வீடு இல்லாதவர்களின் எண்ணிக்கை..... தெருவோரம் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கை எல்லாம் வெளிவர ஆரம்பித்திறது. இது அவர்கள் மட்டமாக காண்பிக்கும் ஆப்ரிக்க நாடுகளை விட அதிகம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்???
இந்த அமெரிக்க டாலர் சமாச்சாரத்தை அதன் அழிச்சாட்டியத்தை முதலில் கண்டது ஐரோப்பிய நாடுகளில் தான். அதனால் தான் டாலருக்கு எதிராக யூரோ கரன்சியை கொண்டு வந்தனர். வழக்கம் போல் அமெரிக்கர்களின் சில்லுண்டு வேலைகளினால் இன்று அந்த தேசங்களே உலக வரைபடத்தில் இருந்தே காணாமல் போய் கொண்டு இருக்கிறது.
இதற்கு அடுத்ததாக மின்னணு சாதனங்களைக் கொண்ட தொழிற் புரட்சி காரணமாக பிட்காயின் வளர்ச்சி கண்டது. அமெரிக்கர்கள் வாங்கிய முதல் அடி இதில் தான். கிரிப்டோ கரன்சி என்று இதற்கு பெயர். எல்லாம் சரி.....
இதில் பிரிக்ஸ் எங்கே வருகிறது....!?!?!
யுரோ கரன்சி குணங்களும் இன்று இருக்கும் மின்னணு உபகரணங்கள் துணைக் கொண்டு மேற்சொன்ன கிரிப்டோ கரன்சி குணங்களையும் ஒரு சேர நம்மவர்கள் முன்னெடுக்கும் மிகப் பெரிய திட்டமிடல் தான் நாளைய பிரிக்ஸ் கரன்சியாக இருக்கப் போகிறது. அதன் வெள்ளோட்டம் தான் நமது இன்றைய UPI பேமெண்ட்.
எப்படி சாத்தியமாகும் இது ...? மீண்டும் முதலில் பார்த்த விஷயங்களை கொண்டே...., நிலப்பரப்பில், ஜனத்தொகையில், அதிகப் படியாக உள்ளவர்களின் பங்களிப்பை உலக அளவிலான பொருளாதார பங்களிப்பில் இடப் பெற செய்ய வேண்டும் என்கிற ஸ்லோகனை முன்னெடுத்து வேலை பார்த்து வருகிறார்கள்.
பலமான பொருளாதார நாடு B பிரேசில்.. அடுத்து நிலப்பரப்பில் இன்றைய அமெரிக்காவுக்கு சமம் R ரஷ்யா. அமெரிக்காவுக்கு நிகரான செல்வாக்கு மற்றும் உலக வரைபடத்தில் கிழக்கில் இருந்து மேற்கு வரை அதன் நிலப்பரப்பு. I இந்தியா மற்றும் C சீனா ஆகிய நாடுகளின் மக்கள் தொகை மற்றும் உலகின் மிகப்பெரிய நுகர்வோர் சந்தை மற்றும் உற்பத்தியாளர்கள். அடுத்ததாக S தென் ஆப்ரிக்கா. இவர்களை ஒருங்கிணைத்தது தான் பிரிக்ஸ்.BRICS.
இன்றைய தேதியில் 68 ட்ரில்லியன் டாலர்கள் பொருளாதார சந்தை மதிப்பு, மேற்சொன்ன நாடுகளுடையது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு உலக நாடுகள் கதி கலங்காமல் என்ன செய்யும். பிரிக்ஸ் ஆரம்பித்து..... ஆரம்ப காலத்தில் இத்தகைய வளர்ச்சி திட்டங்கள் ஏதும் அதனிடத்தில் இல்லை. ஆனால் இன்று அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கிறது. ஒரே காரணம் நம்மவர்கள். ஓயாமல் உழைத்து கொண்டிருக்கிறார்கள். சாய்க்காமல் ஓய மாட்டோம் என சத்தாய்த்துக்கொண்டு நிற்கிறது மேற்குலகம்.
மேற்சொன்ன எல்லா நாடுகளிலும் ஏதோ ஒரு பிரச்சினை ஏதோ ஒரு பஞ்சாயத்து. பின்னணியில்... அத்தனையிலும் இருப்பது அந்த ஒற்றை டாலர் தேசம். அதனால் இவர்களும் அதனை முடிவிடும் முடிவோடு களமிறங்கி இருக்கிறார்கள். இது அவர்களுக்கும் தெரியும்... யார் இதனை முன்னெடுக்கிறார்கள் என்று. அதனால் கதி கலங்கி நிற்கிறார்கள். என்ன செய்ய.... பண்ணி வைத்து இருக்கும் சேட்டைகள் அப்படி பட்டது. சரி, எப்படி செய்யப் போகிறார்கள்... அதே பழைய டெக்னிக் தான். அவன் பொருள் எடுத்து அவனையே போடுவது.
டாலருக்கு நிகரான தங்கத்தையே தான் இவர்களும்... அதாவது பிரிக்ஸூம் முன்னெடுக்கும். ஆனால் அதனை மின்னணுவில். முதல் முயற்சியாக மேற்சொன்ன நாடுகளில் வர்த்தகம் செய்ய அவரவர் வசதிக்கேற்ப UPI பேமெண்ட் முறையை விரிவுபடுத்த இருக்கிறார்கள். பொது கரன்சிக்கு பதிலாக தங்கத்தின் மதிப்பில் கணக்கிட முடிவு செய்து இருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட திரைமறைவில் பிட்காயின் செயல்பாடுகள் போல் தெரிந்தாலும் அதனை அனைவரும் அறிய டிரான்ஸ்பெரட்டாக செய்ய... இதற்கு அரசாங்க பாதுகாப்பும் இருக்கும். அதேசமயம் அந்தந்த நாடுகளின் வரி வருவாயும் நேர் படும். ஒரு வேளை அமெரிக்கா ஏதேனும் தகிடுதத்தம் செய்ய முனைந்தால் ...... அவர்களால் இதில் செய்ய முடிந்த விஷயமாக தங்கத்தை கொண்டே இருக்கும்.
அப்போது மேற்சொன்ன நாடுகளில் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் டாலர்களை புழக்கத்துக்கு கொண்டு வர அமெரிக்க பொருளாதாரமே காணாமல் போகக்கூடும் என்கிறார்கள். பார்த்து பார்த்து அசந்து போய் நிற்கிறது உலக நாடுகள். அத்தனை தூரம் மதி நுட்பம் சார்ந்த திட்டமிடல் இது என சிலாகிக்கிறார்கள்.
பிரிக்ஸில் இணைய உலக நாடுகள் வரிசை கட்டி நிற்கின்றன..... பார்த்து பார்த்து பூரித்து போய் நிற்கிறார் ஜிங் பிங். அவரால் முன்னெடுக்கப்பட்ட பிரிக்ஸ் அல்லவா இது. ஆனால் அவரையே அசரடிக்கும் விதத்தில் மாற்றீடு செய்து இருக்கிறார்கள் நம்மவர்கள். அதாவது இந்தியர்கள். இதுவெல்லாம் நடக்கிற காரியமா......????? இல்லை பார்த்து கொண்டு அமெரிக்கா தான் சும்மா நிற்குமா...?!?! என விதண்டாவாதம் செய்பவர்களுக்கு, ஒர் தகவல். ஏற்கனவே நடைமுறையில் செயல்படுத்தி பார்த்தும் விட்டனர் நம்மவர்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.....??
ரஷ்யா, இன்று மேற்கு உலக நாடுகளின் பொருளாதார தடைகளை தாண்டி திமிறி நிற்கிறதே...... யாரால்?? எதனால்..??? யார் பேச்சையும் கேட்காத புடினே நம் பாரதப் பிரதமரை கொண்டாடுகிறாரே.... எப்படி? யுத்திற்கான யுகம் இதுவல்ல நேரிடையாக அவர் முகம் பார்த்து இவர் சொல்ல... அவர் அதனை ஏற்கிறார் என்றால்..... இதில் அத்தனை லாபம் இருக்கிறது என்பதை அவரால் நன்கு அவதானிக்க முடிந்திருக்கிறது என்று பொருள்.
பார்த்து பார்த்து வெம்புகிறார்கள் மேற்கு உலக வாசிகள்..... இது நமக்கு தோன்றாது போயிற்றே..... நாமல்லவா இவற்றை முன்னெடுத்திருக்க வேண்டும் என அலமலந்து நிற்கிறார்கள். ஏனெனில் அத்தனை தூரம் சாத்தியமாகும் ....நாளையே நிகழப் போகும் நிதர்சனம் இது. ஏற்கனவே மத்திய கிழக்கு நாடுகளில் இதற்கு மாறி வருகிறார்கள். நம் இந்திய பொருளாதார முகமே மாறப் போகிறது. தேச எல்லைகள் மாறப் போகிறது.
இவையெல்லாம் வெறும் பொய்கள் அல்ல..... வெற்று பொழுது போக்கு வாசகங்கள் அல்ல.. உதாரணமாக கடந்த பத்து ஆண்டுகளில் நம் இந்திய மில்லினியர்களின் கணிசமான அளவிற்கு உயர்ந்திருப்பதே இதற்கு சான்று. நாம் வாழும் காலத்தில் நம் கண் முன்னே நம் தேசம் திடகாத்திரமாக வளர்ந்து வருகிறது. உலகில் ஆயுத பலத்தால் எழுந்து நிற்கும் தேசமெல்லாம் நிச்சயம் ஒருநாள் பொருளாதார பலத்துடன் ஆன்ம சக்தியோடு எழுந்து நிற்கும் தேசத்திடம் அடி பணிந்தே ஆக வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை..... அருள் இல்லார்க்கு எவ்வுலகும் இல்லை..... என சும்மாவா சொல்லிச் சென்றனர் நம் முன்னோர்கள். இந்த இரண்டு உலகையும் கட்டியாள ராஜபாட்டையே போட்டு கொண்டு இருக்கிறார்கள் நம்மவர்கள்..... என்றால் மிகையாகாது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu