ஆப்கானிஸ்தானில் மசூதியில் குண்டுவெடிப்பு.. 100க்கும் மேற்பட்டோர் பலி
குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்த மசூதி
ஆப்கானிஸ்தானின் சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாககவும், ஷியா முஸ்லிம்கள் சிறுபான்மையினராகவும் உள்ளனர். வடகிழக்கில் உள்ள குந்தூஸ் மாகாணத்தில் ஷியா பிரிவினர் மத சிறுபான்மையினராக வசித்துவருகின்றனர். நேற்று அங்குள்ள ஷியா மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 70க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
இந்நிலையில் இந்தப் பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா., விடுத்துள்ள அறிக்கையில், "உலகில் அனைவரும் தங்கள் மதத்தை கடைபிடிக்க உரிமை உண்டு. ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் காயமுற்றவர்களுக்கு சிகிச்சையை உறுதி செய்ய வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதும் தலிபான்கள் நாட்டை கைப்பற்றினர். கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் 170 பொதுமக்கள் மற்றும் 13 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். தற்போது ஷியா மக்கள் மசூதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu