சிறு வயதில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுஃப்சாய் பிறந்தநாள்
மலாலா யூசுஃப்சாய்
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுஃப்சாய் பிறந்தநாள் இன்று...
மலாலா யூசுஃப்சாய் - 1997 ஜூலை 12 ம் நாள் பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் பிறந்தார். இவரது தந்தை ஜியாவுதீன் யூசுப்சாய். பாகிஸ்தானின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் தாலிபான்கள் பெண்கள்படிக்கக் கூடாது, தெருக்களில் நடமாடக்கூடாது என்று தடை விதித்திருந்தனர். இதனை எதிர்த்த மலாலா என் அடிப்படை உரிமையான கல்வியைத் தடுக்க தாலிபான்களுக்கு என்ன தைரியம் இருக்க வேண்டும்? என கேள்வி கேட்டாள். இந்த கேள்வியை கேட்கும் பொழுது அவளின் வயது 11.
அடுத்த ஆண்டு பிபிசி செய்தி நிறுவனம் பெண்களின் கல்வி பற்றிய கட்டுரையை ஒரு பெண் குழைந்தையே எழுதினால் சிறப்பாக இருக்கும் என கருதியது. எனவே ஜியாவுதீன் பள்ளியில் இருந்து ஒரு குழந்தையை தேர்ந்தெடுத்தனர். ஆனால் அக்குழந்தையின் பெற்றோர்கள் அதற்கு தயக்கம் காட்டினர்.
பின்னர் ஜியாவுதீன் தன் மகளையே எழுத வைத்தார். முதலில் தன்னை அடையாளம் காட்டாமல் எழுதத்தொடங்கிய மலாலாவின் கட்டுரைகள் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. பின்னர் பொது இடங்களில் பெண் குழந்தைகளுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை தைரியமாக எடுத்துரைத்தார். இதனால் தாலிபான்களின் தாக்குதலுக்கு ஆளானார்.
அக்டோபர் 9, 2012ம் ஆண்டு தாலிபான்கள் இவரை சுட்டனர். படுகாயமடைந்த மலாலா, பிரிட்டன் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று பின் குணமடைந்தார். பின் பிரிட்டனிலேயே தன் பள்ளி படிப்பை தொடர்ந்தார். 2014ம் ஆண்டு இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. மிகவும் சிறு வயதில் நோபல் பரிசு பெற்றவர் இவரே ஆவார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu