பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு : 8 பேர் உயிரிழப்பு..!

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு : 8 பேர் உயிரிழப்பு..!
X

Balochistan blast-பாகிஸ்தானின் கராச்சியில் பிப்ரவரி 8 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக,இன்று புதன்கிழமை, பாதுகாப்புக்காக சாலை ஓரத்தில் துணை ராணுவப் படையினர் காவலுக்கு நிற்கிறார்கள். (AP புகைப்படம்/ஃபரீத் கான்)

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள அரசியல் கட்சி அலுவலகத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

Pakistan Elections,Pakistan polls,Balochistan,Balochistan Blast

பாகிஸ்தான் பொதுத் தேர்தல் நாளை நடக்கவுள்ள நிலையில் இன்று பலுசிஸ்தானில் உள்ள அரசியல் கட்சி அலுவலகத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Balochistan Blast

"பிஷின் மாவட்டத்தின் நோகண்டி பகுதியின் வேட்பாளரின் அலுவலகத்தில் குண்டுவெடிப்பு நடந்தது, எட்டு பேர் கொல்லப்பட்டனர்" என்று பிஷின் துணை ஆணையர் ஜும்மா தாத் கான் ராய்ட்டர்ஸ் மேற்கோள் காட்டினார்.

இதுகுறித்த விரிவான தகவல்கள் இன்னும் வெளியாக உள்ளன.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்