ஆசியாவின் பணக்கார கிராமம் எந்த நாட்டில் இருக்கு தெரியுமா?
asia's richest village-ஆசியாவின் பணக்கார கிராமம் மாதப்பூர்
Asia's Richest Village
அரசின் வளர்ச்சித் திட்டங்களால் நாடு முழுவதும் உள்ள கிராமங்களும் செழிப்பை நோக்கி முன்னேறி வருகின்றன. ஆசியாவிலேயேமிகவும் பணக்கார கிராமம் என்று பேர் வாங்கியுள்ள அந்த கிராமம் சீனா, ஜப்பான் அல்லது தென் கொரியாவில் இல்லை என்பது மட்டும் உண்மை.
ஆசியாவின் பணக்கார கிராமம் குஜராத் மாநிலம், பூஜ்ஜில் உள்ள ஒரு கிராமம் தான் அது. அந்த கிராமத்தைப் பற்றி முழுமையாக அறிந்தால் இந்திய கிராமங்களைப் பற்றிய உங்கள் பார்வை முழுவதுமாக மாறிவிடும்.
ஒரு கிராமம் என்று நமக்குள் ஒரு கற்பனை இருக்கும். அதாவது கிராமம் என்று நினைத்தாலே சேறும் சகதியுமான சாலைகள், கைப்பம்புகள், மாட்டு வண்டிகள், மின்சாரம் இல்லாத களிமண் வீடுகள், வயல்களில் வேலை செய்யும் விவசாயக் கூலிகள் போன்ற படங்கள்தான் நம் கண்முன் தோன்றும்.
Asia's Richest Village
அரசின் வளர்ச்சித் திட்டங்களால் நாடு முழுவதும் உள்ள கிராமங்களும் செழிப்பை நோக்கி முன்னேறி வருகின்றன. ஆசியாவின் பணக்கார கிராமம் சீனா, ஜப்பான் அல்லது தென் கொரியாவில் இல்லை; அது நம் நாட்டில் உள்ளது. குஜராத்தின் பூஜ்ஜில் உள்ள ஒரு கிராமம், இந்திய கிராமங்களைப் பற்றிய உங்கள் பார்வையை என்றென்றும் மாற்றிவிடும்.
குஜராத் மாநிலம் பூஜ்ஜில் உள்ள மாதப்பூர் தான் ஆசியாவின் பணக்கார கிராமம் என்று அழைக்கப்படுகிறது இந்த கிராமம் குஜராத்தின் பூஜ் புறநகரில் உள்ளது. இந்த கிராமம் சுமார் 32,000 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.
இந்த மக்கள் ரூ. 7,000 கோடி மதிப்புள்ள நிலையான வைப்புத்தொகையை வைத்திருப்பது பெருமைக்குரிய விஷயமாக உள்ளது. கிராமத்தின் செழிப்புக்கு அதன் 65சதவீத வெளிநாடு வாழ் இந்தியர்கள்தான் காரணமாக உள்ளனர். அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய்களை உள்ளூர் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் டெபாசிட் செய்கிறார்கள். அவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு பணம் அனுப்புகிறார்கள்.
Asia's Richest Village
மாதப்பூரில், தோராயமாக 20,000 வீடுகள் உள்ளன. இது படேல் சமூகம் வாழும் ஒரு கிராமமாகும். எந்தவொரு பெரிய பொது மற்றும் தனியார் வங்கியின் கிளை மாதப்பூரில் இருக்கும் என்றால் அதன் வருவாயைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.
இந்த கிராமத்தில் HDFC வங்கி, SBI, PNB, Axis Bank, ICICI வங்கி மற்றும் யூனியன் வங்கி உட்பட 17 வங்கிகள் உள்ளன. இன்னும் இந்த கிராமத்தில் பல பொது மற்றும் தனியார் வங்கிகள் தங்கள் கிளைகளை திறக்க ஆர்வமாக உள்ளன.
கட்டுமானத் தொழிலில் ஆதிக்கம் செலுத்தும் ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கும் என்ஆர்ஐ குடும்பங்களின் குறிப்பிடத்தக்க வைப்புத்தொகை இந்த வங்கிகளில் முதன்மையானது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
Asia's Richest Village
பல குடியிருப்பாளர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திலும் வசிக்கின்றனர். வெளிநாட்டில் வாழ்ந்தாலும், இந்த மக்கள் இன்னும் தங்கள் வேர்களுடன் இணைந்திருக்கிறார்கள். மேலும் அவர்களின் கிராமத்தில் முழுமையான மாற்றங்களைக் கொண்டு வருகிறார்கள்.
"பல கிராம மக்கள் வெளிநாட்டில் வசிக்கிறார்கள்.மேலும் அவர்கள் வெளிநாட்டில் வேலை செய்தாலும், அவர்கள் தங்கள் கிராமத்துடன் முழுமையாக இணைந்திருக்கிறார்கள். மேலும் அவர்கள் வசிக்கும் இடத்தை விட வங்கிகளில் தங்கள் பணத்தை போட்டுவைக்க விரும்புகிறார்கள்" என்று மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் தலைவர் பருல்பென் காராவை மேற்கோள் காட்டி எகனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
"மிகப்பெரிய டெபாசிட்கள் வங்கிகளை செழுமையாக்கியுள்ளன. தண்ணீர், சுகாதாரம் மற்றும் சாலைகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளையும் இந்த கிராமம் கொண்டுள்ளது. பங்களாக்கள், பொது மற்றும் தனியார் பள்ளிகள், ஏரிகள் மற்றும் கோவில்கள் உள்ளன," என்று கிராமத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளை மேலாளர் கூறினார்.
Asia's Richest Village
மாதப்பூரில் கிட்டத்தட்ட 20,000 வீடுகள் உள்ளன. தோராயமாக 1,200 குடும்பங்கள் வெளிநாட்டில் வசிக்கின்றன. தொடர்ந்து பணம் அனுப்புவதால், கிராமத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், சுகாதார நிலையங்கள், அணைகள், கோவில்கள், ஏரிகள் போன்றவற்றை அவர்களால் மேம்படுத்த முடிந்தது. அவர்கள் தங்களை நாட்டுடன் இணைத்துக் கொள்ளவும், வெளிநாட்டில் தங்கள் கிராமத்தின் இமேஜை மேம்படுத்தவும் எண்ணி, லண்டனில் மாதப்பூர் கிராம சங்கத்தையும் நிறுவியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu