உலகின் கவனத்தை ஈர்த்த 11 வயது பிலிப்பைன்ஸ் மாணவி
சாதனை படைத்த பதினொரு வயது பிலிப்பைன்ஸ் மாணவியின் கால்களை பாருங்கள்.
பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 11 வயது தடகள வீராங்கனையான ரியா புல்லோஸ், உள்ளூர் பள்ளிகளுக்கிடையேயான ஓட்டப் போட்டியில் பங்கேற்று வைரலானார். புல்லோஸ் 400 மீட்டர், 800 மீட்டர் மற்றும் 1,500 மீட்டர் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார்.
அந்த பெண் வெற்றி பெற்றதால் மட்டும் வைரலாகவில்லை, அவள் ஓடுவதற்கு ஷூ இல்லாததாலும், பேண்டேஜ்களை ஷூவாக பயன்படுத்தி ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று வெற்றி பெற்றதாலும், வைரல் ஆகி விட்டாள்.
இதிலிருந்து என்ன புரிகிறது. உங்கள் வாழ்வின் எந்த நேரத்திலும், நீங்கள் வெற்றிபெறத் தேவையான அனைத்தும் உங்களிடம் உள்ளன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அந்த பிலிப்பைன்ஸ் மாணவி செருப்பு வைத்திருப்பவர்களிடம், கவனம் செலுத்தாமல், தன்னிடம் இருந்ததை பயன்படுத்துவதில் கவனம் செலுத்தி, மேலும் பல வாய்ப்புகளை தனக்காக உருவாக்கி உள்ளார்.
மற்ற ஓட்டப்பந்தய வீரர்கள் அல்லது பார்வையாளர்கள் எங்களைப் பற்றி என்ன சொல்லப் போகிறார்கள் என்ற பயத்தில் நம்மில் பலர் கலந்து கொள்ளாமல், நம் வாழ்க்கையை மேம்படுத்தி இறுதியில் மற்ற வாய்ப்புகளைக் கொண்டு வரும் வாய்ப்பைத் தவற விட்டிருப்போம். உங்களிடம் உள்ளதை நீங்கள் பயன்படுத்தாததால், எத்தனை வாய்ப்புகள் உங்களை விட்டு சென்று இருக்கிறது? மற்றவர்கள் எப்படி ஆரம்பித்தார்கள் என்பதில் கவனம் செலுத்துவதை நிறுத்தி விட்டு, உங்களிடம் உள்ளதைப் பயன்படுத்தத் தொடங்குங்கள். எப்பொழுதும் நினைவில் உங்களையே வைத்து இருங்கள். ஏன்னா உங்களால் தான் உங்களை உருவாக்க முடியும். உங்களால் தான் உங்களை அழிக்கவும் முடியும். எதற்காகவும் எதையும் காரணம் சொல்லாதீர்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu