'தனியாக சாதிக்க முடியாது; ஒன்றுபட்டே சாதிக்கணும்' -ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பார்லிமென்டில் பேசும்போது..
அமெரிக்கா பல பிரச்னைகளில் இருந்து விடுபட்டு இன்றுமுதல் புதிய அமெரிக்கா உதயமாகிறது என்று பார்லிமென்டின் முதல் கூட்டுக் கூட்டத்தில் அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபராக ஜனவரி மாதம் ஜோ பைடன் பதவி ஏற்றார். அதிபராக தேர்வு செய்யப்பட்டப் பின் பார்லிமென்ட் கூட்டுக் கூட்டத்தில் அவரது முதல் உரையை நேற்று நிகழ்த்தினார். அவர் பேசும்போது, ‛ஒரு நுாற்றாண்டில் இல்லாத அளவுக்கு மோசமான வைரஸ் தொற்று ஏற்பட்டு, கடந்த, 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான பொருளாதார பிரச்னை சந்திக்கும் நிலையில், பல்வேறு பிரச்னைகளை எதிர்நோக்கும் சவாலான காலகட்டத்தில் அதிபராக பதவிஏற்றுள்ளேன்.
கடந்த, 100 நாட்களில் எதிர்ப்பட்ட சவால்களை வாய்ப்புகளாக மாற்றினோம். பின்னடைவுகளை உறுதியுடன் வலிமையாக மாற்றினோம். தற்போது அமெரிக்கா மீண்டும் புதிய விடியலை நோக்கி செல்கிறது. நாம் மீண்டு வந்துள்ளோம். தொடர்ந்து முன்னேறுவோம்.
ஆனால், இதைபோன்ற சவால்களை நாம் தனியாக செய்ய முடியாது. நமது தோழமை நாடுகள், நட்பு நாடுகள் என்று அனைவரின் உதவியுடன் தான் இதை வெற்றிகரமாக செய்ய முடியும்.உலகப் பொருளாதாரத்தில், அனைத்து நாடுகளும் மற்ற நாடுகளை மதித்து நடக்க வேண்டும். இதைத்தான் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் வலியுறுத்தினேன்'. இவ்வாறு அவர் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu