ஒரு நாளைக்கு 11 மணி நேரம் : எந்த நாட்டில் தெரியுமா?

ஒரு நாளைக்கு 11 மணி நேரம் :  எந்த நாட்டில் தெரியுமா?
X

11 மணி நேர கடிகாரம் 

உலகிலேயே 11மணி நேரம் மட்டுமே உள்ள கடிகாரம் எங்குள்ளது என தெரியுமா?.

இந்த உலகில் நமக்கு தெரியாத பல விஷயங்கள் உள்ளன. மேலும் தெரியாததை அறியும் ஆவல் எல்லோருக்கும் உண்டு. குறிப்பாக, உலகில் எந்த நகரம் 12 மணியே இல்லாத கடிகாரத்தைப் பயன்படுத்துகிறது? கடிகாரத்தில் கடைசியாக இருப்பது 11 மணி மட்டும் தான். எந்த நாடு தெரியுமா?

கடிகாரத்தில் 12 மணிநேரம் பார்க்கப் பழகிவிட்டோம். ஆனால் மொத்தமே 11 மணி நேரம் என்றால் ஆச்சரியம்தான். சுவிட்சர்லாந்தின் வடமேற்கு நகரமான சோலோதர்ன் நகரில் இப்படியொரு கடிகாரம் உள்ளது. அங்கே 12 மணி ஆகாது.

நகரின் மையத்தில் உள்ள டவுன் சதுக்கத்திற்கு முன்னால் உள்ள கடிகாரத்தைப் பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் சோலோதர்னுக்குச் செல்கின்றனர். அந்த கடிகாரத்தில் 11 எண்கள் உள்ளன. அதாவது, இந்தக் கடிகாரத்தில் 12 மணி என்பதே இருப்பதில்லை.

கடிகாரம் மட்டுமல்ல, இந்த நகரத்துடன் 11 என்ற எண்ணின் உறவும் இன்னும் கொஞ்சம் நெருக்கமாக இருக்கிறது. எண் 11 நகரத்தில் உள்ள எல்லாவற்றுடனும் தொடர்புடையது. உதாரணமாக, நகரத்தில் 11 அருங்காட்சியகங்கள், 11 தேவாலயங்கள், 11 நீரூற்றுகள் என பல உள்ளன.

சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு ரோமானியர்கள் சோலோதர்ன் நகரத்தை நிறுவினர். நகரம் அப்போது அவ்வளவு பிரபலமாக இல்லை என்றாலும். நாட்கள் செல்ல செல்ல, தற்செயலாக இந்த நகரத்துடன் 11 என்ற எண் இணைக்கப்பட்டது.

1215 இல் சோலோதர்னில் கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, 11 பிரதிநிதிகள் இருந்தனர்.1481 இல் சோலோதர்ன் 11 வது மாகாணமாக சுவிஸ் கூட்டமைப்பில் சேர்க்கப்பட்டது.

அப்போது 11 நகர காவலர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்குப் பிறகு, 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், புனித அர்சஸ் தேவாலயம் இந்த நகரத்தில் கட்டப்பட்டது. அந்த தேவாலயத்தில் 11 கதவுகள், 11 ஜன்னல்கள், 11 வரிசைகள் மற்றும் 11 மணிகள் உள்ளன. அந்த தேவாலயத்தின் கட்டுமானத்தில் 11 வகையான கற்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்த கடிகாரம் நகரத்தின் எண் 11 உடன் அவ்வளவு நெருக்கமான உறவைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இருப்பினும், கடிகாரத்தில் 12 வது மணி இல்லாததற்கான சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் இன்றும் இந்த கடிகாரம் ஒரு அதிசயமாகவே உள்ளது.

Tags

Next Story