7.1 கிலோ எடையில் பிறந்த குழந்தை..! பிறக்கும்போதே சாதனை..!

சிலியன் குழந்தை
பிறக்கும் போதே பலர் உலகம் முழுவதும் பாப்புலர் ஆகி விடுவார்கள். பிறப்பின் போது நடந்த சுவாரஸ்யங்கள் அனைத்தும் தற்போதைய இன்டர்நெட் உலகில் வேகமாக வீடியோக்களாக பரவி வருகிறது. இதற்கு முன்னர் பிறந்த உடனே நீந்திய குழந்தை, பிறந்த உடனே புரண்டு படுத்த குழந்தை, பிறந்த உடனே நர்சுகளின் கையில் இருந்து கொண்டே தாயின் உடல் மீது நடைபோட்ட குழந்தை என பல சுவாரஸ்யமான விஷயங்கள் வீடியோக்களில் பரவி வருகிறது. தற்போது லேட்டஸ்ட் அப்டேட் சிலி நாட்டில் நடந்துள்ளது.
தாயும் சேயும் நலமாக உள்ளனர் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாகப் பிறந்த குழந்தைகளின் எடை 2.5 கிலோ முதல் 4கிலோ வரை இருக்கும். 4 கிலோவுக்கு மேல் பிறக்கும் குழந்தைகள் உடல் பருமனாகக் கருதப்படுவதோடு பிறவி குறைபாடுகள் இருக்கலாம். 1.5 கிலோவுக்கு குறைவான எடையுடன் பிறக்கும் குழந்தைகள் ஆபத்தில் இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்த குழந்தைகளின் எடையை மேம்படுத்த, சிறப்பு உணவு குழாய்கள் கொண்ட இன்குபேட்டர்களில் வைக்கப்படுகின்றனர்.
ஆனால், சிலி நாட்டில் ஆண் குழந்தை ஒன்று 7.1 கிலோ எடையில் பிறந்துள்ளது. அதிக எடைக் கொண்ட பிறந்த குழந்தைகளில் இதுவரை 7 கிலோவை தொட்டது இல்லை. அந்நாட்டில் ஏற்கனவே 6.7 கிலோ எடையுடன் பிறந்த குழந்தையின் சாதனையை தற்போது பிறந்துள்ள குழந்தை முறியடித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu