கடந்த வாரம் 1,000 பேர் இறந்த ஆப்கானிஸ்தான் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்
கடந்த வாரம் நிலநடுக்கத்தில் 1,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட அதே பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மேற்கு ஆப்கானிஸ்தானை உலுக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு மாகாணத்தின் தலைநகரான ஹெராத் நகருக்கு வடமேற்கே 33 கிலோமீட்டர் (20 மைல்) தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டு காலை 8:00 மணிக்கு (0330 GMT) பிறகு தாக்கியது என்று தெரிவித்துள்ளது.
அதைத் தொடர்ந்து 20 நிமிடங்களுக்குப் பிறகு 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை, இருப்பினும், பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்தனர்.
ஹெராத் நகரில் கடந்த சனிக்கிழமையன்று பேரழிவு தரும் நிலநடுக்கத்திற்கு ஒரு வாரத்திற்குப் பிறகும் பெரும்பாலான மக்கள் இரவில் தங்கள் வீடுகளை பின்னதிர்வுகள் தாக்கும் என்று பயந்து இன்னும் வெளியில் தூங்கிக் கொண்டிருகின்றனர்.
அக்டோபர் 7 ஆம் தேதி, மற்றொரு 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் எட்டு சக்திவாய்ந்த பின்அதிர்வுகள் ஹெராட்டின் அதே பகுதியை உலுக்கியது, இதில் கிராமப்புற வீடுகள் இடிந்தன. இதில் 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO) இந்த எண்ணிக்கையை கிட்டத்தட்ட 1,400 என்று கூறியது.
ஆகஸ்ட் 2021 இல் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஆப்கானிஸ்தானின் தலிபான் அதிகாரிகளுக்கு பெரிய அளவில் தங்குமிடம் வழங்குவது சவாலாக இருக்கும். "அந்தப் பகுதி மிகவும் குளிராக இருக்கிறது, மாலைக்குப் பிறகு அங்கு தங்குவது மிகவும் கடினம்" என்று பொது சுகாதார அமைச்சர் கலாந்தர் எபாட் கூறினார்."அவர்கள் அங்கு ஒரு மாதத்திற்கு கூடாரங்களில் வசிக்க முடியும் என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் அதைவிட அதிகமாக மிகவும் கடினமாக இருக்கும்."
ஆப்கானிஸ்தானின் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான வீடுகள் மண்ணால் ஆனவை மற்றும் மரத்தாலான ஆதரவுக் கம்பங்களைச் சுற்றி கட்டப்பட்டவை, எஃகு அல்லது கான்கிரீட் வலுவூட்டல் வசதிகள் குறைவாகவே உள்ளன. பல தலைமுறைகளாக இங்கு வாழும் குடும்பங்கள் பொதுவாக ஒரே கூரையின் கீழ் வாழ்கின்றன, அதாவது கடுமையான பூகம்பங்கள் சமூகங்களை அழிக்கக்கூடும்.
ஆப்கானிஸ்தான் ஏற்கனவே ஒரு மோசமான மனிதாபிமான நெருக்கடியை அனுபவித்து வருகிறது, தலிபான்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வந்ததைத் தொடர்ந்து வெளிநாட்டு உதவி பரவலாக திரும்பப் பெறப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu