ஒரே நேரத்தில் போரில் ஈடுபடும் 10 பெரிய நாடுகள்..!
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரான்.
இஸ்ரேலின் ஆணிவேரையே அசைத்து பார்த்த தாக்குதல். நாங்கள் 99% ஏவுகணைகளை மறித்து விட்டோம். ஈரான் எங்களுக்கு சேதங்களை ஏற்படுத்தவில்லை என்று இஸ்ரேல் கூறலாம். ஆனால் ஈரானின் 80% ஏவுகணைகளை இஸ்ரேலில் இலக்கை தாக்கி உள்ளதாகவே உலக போர் வல்லுனர்கள் கூறுகின்றனர். இதற்கெல்லாம் கண்டிப்பாக இஸ்ரேல் பதிலடி கொடுக்கும். அந்த பதிலடி போரை கூட உருவாக்கும். ஏற்கனவே பல நாடுகள் போரில் ஈடுபட்டு வரும் நிலையில்.. இஸ்ரேலின் பதிலடி வெறும் போரை மட்டும் உருவாக்காது. அது உலகப்போரையே உருவாக்கும்.
உக்ரைன் - ரஷ்ய போர் ஒரு பக்கம் தீவிரமாக நிற்காமல் நடந்து கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் இஸ்ரேல் - பாலஸ்தீன போர் தொடங்கி விட்டது. இரண்டு போருமே கண்டிப்பாக நீண்ட கால போராக இருக்கும்.
ஒரு பக்கம் உக்ரைன் ரஷ்யா போர் உச்சத்திலேயே உள்ளது. அமெரிக்கா - ரஷ்யா இடையே 1960களில் நடைபெற்ற பனிப்போருக்கு பின்பாக மிக மிக மோசமான மோதல் தற்போது ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு அமெரிக்கா, ரஷ்யா இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் உக்ரைன். உக்ரைன் நேட்டோ படையில் இணைய விரும்பியது. இதற்காக முயற்சிகளை செய்தது.
சோவியத் யூனியன் ஒன்றாக இருந்த போது ரஷ்யாவும் - உக்ரைனும் ஒன்றாக இருந்த நாடுகள் ஆகும். அதன்பின் 1991 டிசம்பரில் சோவியத் யூனியன் உடைந்த போது உக்ரைன் தனியாக பிரிந்தது. இப்படிப்பட்ட நிலையில் உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் அது ரஷ்யாவிற்கு ஆபத்து. ஏற்கனவே ரஷ்யாவை சுற்றி இருந்த பெரும்பாலான பழைய சோவியத் நாடுகள் அமெரிக்காவின் நேட்டோ படையில் இணைந்து விட்டது. இதில் உக்ரைனும் இணைந்தால் அது ரஷ்யாவிற்கு பெரிய சிக்கலாகும். பாதுகாப்பு ரீதியாக ரஷ்யாவிற்கு நேட்டோ வைக்கும் செக்காக இது அமைந்து விடும்.
இதனால் உக்ரைனை நேட்டோ படையில் சேர விடாமல் தடுக்க ரஷ்யா தீவிர முயற்சி எடுத்து வருகிறது. உக்ரைன் அமெரிக்காவின் முழு நேர கூட்டாளி ஆகும் முன் அதை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற திட்டத்தில் ரஷ்யா இருக்கிறது. ஏனென்றால் ரஷ்யாவின் பெரும்பாலான எல்லையை உக்ரைன் தான் கவர் செய்கிறது. இதற்காக முதலில் உக்ரைன் பிரதமர்களை கட்டுப்படுத்தி ரஷ்யா நிழல் ராஜ்ஜியம் நடத்தியது. ஆனால் அதன்பின் ரஷ்யாவிற்கு ஆதரவாக இருக்கும் அரசியல் தலைவர்களை உக்ரைன் மக்கள் தூக்கி வீசினார்கள்.
இந்த நிலையில்தான் உக்ரைனில் தற்போது கடந்த ஒன்றரை வருடமாக ரஷ்யா போர் செய்து வருகிறது. போர் காரணமாக உக்ரைன் நேட்டோவில் இணைய முடியாது. அதே சமயம் இந்த போர் முடியாமல் அப்படியே நீடிக்கும். இதில் நேட்டோ நேரடியாக தலையிட்டால் அது உலகபோராக வெடிக்கும். உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுத உதவிகளை செய்து வருகிறது. இன்னொரு பக்கம் ரஷ்யாவிற்கு ஆதரவாக சீனா இருப்பதால் போர் சூழல் மோசமாகும் என்ற அச்சம் உள்ளது.
இந்த விவகாரத்தில் 3 நாடுகள் அடித்துக்கொண்டு இருக்க இன்னொரு பக்கம்.. பாலஸ்தீனம் - இஸ்ரேல் மோதல் ஏற்பட்டு உள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீன போர் என்பது பாரம்பரியமாக போருக்கு இருக்கும் முக்கியமான காரணம். அது நிலத்தகராறு. அதாவது பாலஸ்தீனம் இருந்த இடத்தில்தான் தற்போதைய இஸ்ரேல் கட்டமைக்கப்பட்டு உள்ளது. 1947ல் இருந்து பாலஸ்தீனத்தை கொஞ்சம் கொஞ்சமாக இஸ்ரேல் ஆக்கிரமித்து வந்தது. தற்போது மீதம் இருக்கும் காஸா பகுதியையும், ஜெருசலேமின் வெஸ்ட் பேங்ங் பகுதிகளையும் கைப்பற்றும் முடிவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
காசாவில் இருந்து பாலஸ்தீன விடுதலை போராட்ட அமைப்பான ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக இந்த தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேலில், இஸ்ரேல் அதிகாரத்தை எதிர்க்கும் தனி பகுதிதான் காசா. இதில் இருந்து இஸ்ரேல் முன்பே வெளியேறி விட்டது. காரணம் இங்கே உள்ள ஹமாஸ் அமைப்பு. இந்த ஹமாஸ் அமைப்பும் - இஸ்ரேலும்தான் தற்போது பாலஸ்தீனத்திற்காக சண்டை போட்டுகொண்டு இருக்கின்றன.
இந்த இரண்டு நாடுகளை சேர்த்து தற்போது மொத்தம் 8 நாடுகள் போரில் நேரடியாக தலையிட்டுள்ளன. இஸ்ரேல், பாலஸ்தீனம், லெபனான், ஈரான், எகிப்து, சிரியா, அமெரிக்கா, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் போரில் நேரடியாக தலையிட்டு உள்ளன. லெபனான், ஈரான், எகிப்து, சிரியா பாலஸ்தீனம் பக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மொத்தமாக இரண்டு போர்களையும் கணக்கிட்டால் 10 நாடுகள் போரில் ஈடுபட்டு வருகின்றன. இதில் ரஷ்யா, சீனாவும் தலையிட்டு உள்ளது. இரண்டு நாடுகளுமே பாலஸ்தீனம் என்ற தனி நாட்டை உருவாக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. இது மூன்றாம் உலகப்போராக வெடிக்கலாம் என்ற அச்சம் உள்ளது.
ஏனென்றால் இரண்டு போர்கள் ஒரே நேரத்தில் நடக்கின்றன. இரண்டு போர்களிலும் அமெரிக்கா தலையிட்டு உள்ளது. ஒன்று ரஷ்ய போர், இன்னொன்று இஸ்ரேல் போர். இரண்டுமே கொள்கை, நில ரீதியாக கடுமையான போர். பல நாடுகள் இதில் தலையிட்டுள்ளன. இந்த காரணங்களுக்காக மூன்றாம் உலகப்போர் வெடிக்கலாம்.
நன்றி: தகவல் உதவி ஷியாம்சுந்தர் பதிவு.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu