கொரோனா தடுப்பூசி சீனர்களுக்கு முன்னுரிமை

கொரோனா தடுப்பூசி சீனர்களுக்கு முன்னுரிமை
X

இலங்கையில் கொரோனா தடுப்பூசியை விநியோகிக்கும்போது இலங்கையிலுள்ள சீன மக்களுக்கே முதலில் முன்னுரிமை வழங்கப்படுமென கேபினட் அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோ புள்ளே குறிப்பிட்டுள்ளார்.சீன அரசாங்கம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை சீனாவிலிருந்து தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காகவே சீன அரசாங்கத்தின் இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.இந்நிலையில் இலங்கையிலுள்ள சீன மக்களின் எண்ணிக்கை குறித்தும் இன்னும் கணக்கிடப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!