இருபது நாட்டு பயணிகள் வர சவுதிஅரேபியா தடை

இருபது நாட்டு பயணிகள் வர சவுதிஅரேபியா தடை
X

கொரோனா பரவல் காரணமாக இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து பயணிகள் வருவதற்குத் தடை விதித்து சவுதி அரேபியா உத்தரவிட்டுள்ளது.

கடந்த வருடம் ஆரம்பித்த கொரோனா வைரசின் தாக்கம் இன்று வரை உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல நாடுகள் வெளிநாட்டு விமான சேவைகளை நிறுத்தியுள்ளன. இதில் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து பயணிகள் வருவதற்குத் தடை விதித்து சவுதி அரேபியா உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, லெபனான், துருக்கி, அமெரிக்கா, ஸ்வீடன், பிரேசில், பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, அர்ஜென்டினா, இத்தாலி, அயர்லாந்து, போர்ச்சுகல், தென் ஆப்பிரிக்கா, இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா