இந்தோனேசியாவில் பயணிகள் விமானம் மாயம் !

இந்தோனேசியாவில் பயணிகள் விமானம் மாயம் !
X

இந்தோனேசியாவில் இருந்து 182 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து, ஒரு விமானம் 182 பயணிகளுடன் புறப்பட்டுள்ளது. அந்த விமானம் ஃபோண்டியானாக் பகுதி அருகே சென்ற போது விமானத்துடன் தரைக்கட்டுபாட்டு நிலைய தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. விமானம் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களிலேயே ரேடாரில் இருந்து விமானம் மறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த விமானம் என்ன ஆனது? அதில் சென்ற 182 பயணிகளின் நிலை என்ன? போன்ற கேள்விகள் வெகுவாக எழுந்துள்ளது. காணாமல் போன அந்த விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!