'எனக்கு ஆயுதங்கள்தான் தேவை, சவாரி அல்ல' - அமெரிக்காவிடம் உக்ரைன் அதிபர் ஆவேசம்

எனக்கு ஆயுதங்கள்தான் தேவை, சவாரி அல்ல - அமெரிக்காவிடம் உக்ரைன் அதிபர் ஆவேசம்
X
ரஷ்ய படைகள் நெருங்குவதால் கீவ் நகரிலிருந்து வெளியேறுங்கள் என்ற அமெரிக்காவின் ஆலோசனையை உக்ரைன் அதிபர் ஏற்க மறுத்துவிட்டார்.

உக்ரைனில் 3வது நாளாக ரஷ்ய படைகள் குண்டு மழையை பொழிந்து வருகிறது. இதில் இது வரை 198 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் தலைநகரான கீவ் நகரின் முக்கிய இடங்களில் ரஷ்யப்படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இருப்பினும் உக்ரைன் தலைநகரான கீவ் நகர் எங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரஷ்ய படைகள் நெருங்கி வருவதால், 'தலைநகர் கீவ் நகரிலிருந்து வெளியேறுங்கள்' என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அமெரிக்கா ஆலோசனை வழங்கியுள்ளது. ஆனால் ஜெலன்ஸ்கி இந்த ஆலோசனை ஏற்க மறுத்திருக்கிறார். "சண்டை இங்கேதான் நடக்கிறது. எனக்கு ஆயுதங்கள்தான் தேவை, சவாரி அல்ல" என்று ஜெலன்ஸ்கி தெரிவித்திருக்கிறார் என்று ஏபி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!