தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட்..!

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட்..!

மழை -(கோப்பு படம்)

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்து வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுளளது.

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையின்படி இந்த மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுளளது.

தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என்றும் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

மன்னார் வளைகுடா, தென்தமிழகக் கடலோரப் பகுதிகள், அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள், அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவுப் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று வீசக்கூடும்.

அதனால் மீனவர்கள் கடலுக்குள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுளளது.

நாளை (அக். 1ம் தேதி ) தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளிலும் நாளை மறுநாள் (அக். 2ம் தேதி) மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மேற்கண்ட நாள்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story