அடுத்த சில நாட்களில் வெப்பம் சற்று குறையும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த சில நாட்களில் வெப்பம் சற்று குறையும்: சென்னை வானிலை ஆய்வு மையம்
X

கோப்புப்படம் 

உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை, 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் வாய்ப்புள்ளது.

ஆரம்பமே அனல் பறக்கிறது. தொடக்கமே சுட்டெரிக்கிறது என்றால் போகப்போக .... தமிழ்நாட்டில் பகல் வேளைகளில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயிலும், இரவு வீட்டுக்குள் இருக்கவே முடியாத அளவிற்கு புழுக்கமும் மக்களை வாட்டுகிறது. அதிலும், அக்னி நட்சத்திரம் ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரையில் வெயில் வாட்டி வதைக்கும். ஆனால் இப்போதே அதிக வெயில் சுட்டெரிக்கிறது.

தமிழகத்தில் கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், வெயிலின் தாக்கம் சற்று குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: தென் மாநிலங்களின் மேல், வளி மண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால், மாநிலத்தின் சில மாவட்டங்களில், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதையொட்டிய மாவட்டங்களிலும், காரைக்காலிலும், இன்று முதல் 15ம் தேதி வரையிலும், மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் நான்கு நாட்களுக்கு, தமிழகம், புதுச்சேரி மற்றும் தென் மாவட்டங்களில் சில இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலையானது, 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்புள்ளது.

உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை, 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும். அதிகபட்சம், 35 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்