சுட்டெரிக்கும் வெயில்: இரண்டாவது ரவுண்டு வருகிறாரா சூரியபகவான்?

சுட்டெரிக்கும் வெயில்: இரண்டாவது ரவுண்டு வருகிறாரா சூரியபகவான்?
X
தமிழகத்தில் வெயில் மீண்டும் சுட்டெரிக்க தொடங்கி உள்ளது. மக்களே உங்களை பாதுகாக்க தயாராக இருங்க....

தமிழகத்தில் கடந்த கோடையில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. பல இடங்களில் வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. சில இடங்களில் 112 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரித்தது. அடுத்து தென்மேற்கு பருவமழை தொடங்கியதால், சற்று வெயிலின் தாக்கம் குறைந்தது. தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இந்நிலையில் தென்மேற்கு பருவக்காற்று திசை மாறியதால் தமிழகத்தில் சமவெளி பகுதிகளில் 105 டிகிரி பாரன்ஹீட் அதாவது 40 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெயில் அதிகரிக்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. செப்.21ம் தேதி வரை இந்த நிலை தொடரும். தென்மேற்கு பருவக்காற்று திசை மாறியதால் தமிழகத்தில் சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை 105 டிகிரி பாரன்ஹீட்; அதாவது 40.6 டிகிரி செல்ஷியஸ் ஆக பதிவாகி உள்ளது.

இதனால் ஓரிரு நாட்களுக்கு பகல் நேர வெப்ப நிலை இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கலாம். வெப்பநிலை, காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதால் வெப்பத்தாக்கம் அதிகமாக இருக்கும். மதிய நேரத்தில் வெளியில் செல்வோருக்கு உடல்ரீதியாக அசவுகரியம் ஏற்படலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
the future of ai in healthcare