இந்தியாவில் மே மாதம் வரை கடுமையான வெப்ப அலை இருக்க வாய்ப்பு: வானிலை மையம்
கோப்புப்படம்
ஏப்ரல் மே என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு முதலில் வருவது வாட்டி வதைக்கும் கடுமையான வெயில் தான். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மே மாதங்களில் கோடைகாலத்தின் தாக்கம் இருக்கும். அதிலும் எப்போதும் பொதுமக்கள் பரபரப்பாக சாலைகளில் இயங்கிக் கொண்டிருக்கும் நிறைந்த இடங்களில் கோடை காலத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
கோடை வெயிலின் தாக்கம் இப்போதே ஆரம்பித்து விட்ட நிலையில், பொதுமக்கள் தர்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய், பழரசம், குளிர்பானம் உள்ளிட்டவற்றை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியாவில் 1901ம் ஆண்டுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதத்தில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கோடை காலம் முன்கூட்டியே தொடங்கியுள்ளதாகவும் இந்தியாவில் இந்த மாதம் முதல் மே மாதம் வரை கடுமையான வெப்ப அலை இருக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. இது குறித்த முழுமையான கணிப்பை இன்று மாலை வெளியிடுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை உயர்ந்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. வெப்பத்தால் ஏற்படும் உடல் பாதிப்பு குறித்து அனைத்து மாநிலங்களும் தினசரி கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும் வெப்பத்தால் ஏற்படும் தாக்கங்கள், வெப்ப அலையால் ஏற்படும் நோய்களை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu