/* */

கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’

கோவை, ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’
X

வானிலை ஆய்வு மைய வரைபடம்.

அடுத்த 5 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதில், தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (02.05.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

நாளை (03.05.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

04.05.2023 முதல் 06.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

02.05.2023 மற்றும் 03.05.2023: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திரா - தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்குசெல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 2 May 2023 10:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  3. வீடியோ
    மேடையிலேயே Cool Suresh செய்த சேட்டை அதிர்ச்சியில் உறைந்த நடிகைகள்...
  4. வீடியோ
    🔴LIVE :இளைஞர்களின் உணர்வுகளையும்,தியாகத்தையும் சீமான் வியாபாரம்...
  5. வீடியோ
    கதாநாயகி இல்லாத குறையை தீர்த்த Cool Suresh ! #coolsuresh...
  6. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  7. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  8. ஈரோடு
    புஞ்சை புளியம்பட்டி அருகே அரசு பேருந்தின் மீது கல்வீசி கண்ணாடியை...
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்