5 இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது உண்மையா? – இந்திய அரசு ஆதாரத்துடன் அறிவிப்பு

5 இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதா வதந்தி – இந்திய அரசு ஆதாரத்துடன் மறுப்பு:
'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றிக்குப் பிறகு, பாகிஸ்தான் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில், ரஃபேல் உள்ளிட்ட 5 இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக பரப்பப்பட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் உறுதிப்படுத்தியதாக செய்திகளும் வெளியாகின.
பாகிஸ்தான் மட்டுமல்லாமல் வங்கதேச ஊடகங்களிலும் இதே தகவல் பகிரப்பட்ட நிலையில், சில விமான பாகங்களின் புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. இது பலரை குழப்பத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில், இந்திய அரசு இதனைத் திறந்தவெளியில் முறையாக மறுத்து, உண்மை நிலையை விளக்கும் ஆதாரங்களை பத்திரிகை தகவல் பணியகம் (PIB) மூலம் வெளியிட்டுள்ளது. பழைய விமான விபத்து படங்களைப் பயன்படுத்தி தவறான பஞ்சாங்கம் உருவாக்கப்பட்டதாகவும், பாகிஸ்தானால் வீழ்த்தப்பட்டதாக கூறப்படுவது உண்மையற்ற செய்தி என்றும் இந்திய அரசு உரைத்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu