'ஆதார்' போல ‘டிஆர்’ – மாடுகளுக்கான புதிய அடையாள திட்டம்!விவசாயத்தில் டிஜிட்டல் புரட்சி!

ஆதார் போல ‘டிஆர்’ – மாடுகளுக்கான புதிய அடையாள திட்டம்!விவசாயத்தில் டிஜிட்டல் புரட்சி!
X
மாடு வளர்ப்பு விவசாயத்தை சிறப்பாக கண்காணிக்கவும், பசுமை பொருளாதாரத்தை மேம்படுத்தவும், மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அமல்படுத்தியுள்ளது.

மாடுகளுக்கும் டிஆர் எண் – அடையாள திட்டத்தில் அரசு தீவிரம் :

மாடு வளர்ப்பு விவசாயத்தை சிறப்பாக கண்காணிக்கவும், பசுமை பொருளாதாரத்தை மேம்படுத்தவும், மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன் கீழ், ஒவ்வொரு மாட்டுக்கும் தனித்தனி அடையாள எண் – 'டிஆர் நம்பர்' (Tag Registration Number) வழங்கப்படும். மாடுகளின் நலன்கள், மருத்துவ வரலாறு, பால்வளத் தரவுகள் ஆகியவை இந்நூற் வழியாகத் தொகுக்கப்படும் என அரசு தகவல்கள் கூறுகின்றன.

இந்த திட்டம் முதற்கட்டமாக பசுமாடு வளர்ப்பும், பாலை உற்பத்தியும் அதிகமாக உள்ளமாநிலங்களில் அமல்படுத்தப்படுகிறது. பின்னர், நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் விரிவாக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மாடுகளை அடையாளமிட்டு பதிவு செய்வது மூலம் அரசும் விவசாயிகளும் நேரடி கண்காணிப்பை மேற்கொள்ள முடியும். இதற்கான செயல்பாட்டை நவீன டிஜிட்டல் சாதனங்கள் மூலமாகவே அரசு முன்னெடுத்து வருகிறது.

Tags

Next Story