முடிவுக்கு வந்த தேர்வு - மகிழ்ச்சியில் மாணவர்கள்

முடிவுக்கு வந்த தேர்வு - மகிழ்ச்சியில் மாணவர்கள்
நாமக்கல்: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 28ஆம் தேதி தொடங்கி, நேற்று வெற்றிகரமாக நிறைவுற்றது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த 10,016 மாணவர்கள் மற்றும் 220 தனித்தேர்வர்கள் உட்பட மொத்தம் 19,236 பேர் தேர்வெழுதியுள்ளனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 92 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.
தேர்வு சுமுகமாக நடைபெறுவதற்காக, 94 முதன்மை கண்காணிப்பாளர்கள், 2 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், 2 கூடுதல் துறை அலுவலர்கள், 170 பறக்கும்படை உறுப்பினர்கள், 24 வினாத்தாள் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் 1,690 அறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.
தேர்வு வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, வெளியே வந்த மாணவ, மாணவியர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த 'செல்பி' எடுத்துக் கொண்டனர். மேலும், ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி, துள்ளிக்குதித்து, தேர்வு முடிந்த உற்சாகத்தை பகிர்ந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu