ஒரே நிமிஷம்..லேப்டாப்,செல்போன் ரீசார்ஜ் ஆகும்..! அசத்தல் கண்டுபிடிப்பு..!

ஒரே நிமிஷம்..லேப்டாப்,செல்போன் ரீசார்ஜ் ஆகும்..! அசத்தல் கண்டுபிடிப்பு..!
X
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் நவீன யுகத்தில், நமது பெரும்பாலான நேரத்தை மின்சார சாதனங்களை சார்ஜ் செய்வதிலேயே செலவிடுகிறோம்.

Indian-Origin Researcher Unveiled a New Recharging Technology, Ankur Gupta,Indian Researcher,Electric Car,Electric Car Charge in 10 Minutes,Indian Engineer,EV Charging in 10 Minutes,Ankur Gupta News,Laptop Charging

இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளரின் அசத்தல் கண்டுபிடிப்பு

அறிவியல் தொழில்நுட்ப சாதனங்கள் கண்டுபிடிப்பு வரிசையில் எல்லா சாதனங்களுமே மின்சார தேவையின் அடிப்படையிலேயே இயந்திக்குகிறது. அதுவும் குறிப்பாக பேட்டரிகள் இணைக்கப்பட்ட சாதனங்களை நாம் சார்ஜ் செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட காலநேரத்தினை செலவிடுகிறோம்.

Indian-Origin Researcher Unveiled a New Recharging Technology

தற்போது ஒரு புதிய கண்டுபிடிப்பில் உங்கள் டெட் லேப்டாப் அல்லது ஸ்மார்ட்போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம் என்று நாங்கள் சொன்னால் நம்பாமல் நீங்கள்..இதுவும் போலி (Fake) செய்தியோ என்று எண்ணிவிடாதீர்கள்.

இது முற்றிலும் உண்மை செய்திங்கோ..ஒரே நிமிடத்தில் சார்ஜ் செய்யும் வித்தையை சமீபத்தில் இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளார். ஆமாங்க...நாம மடிக்கணினி அல்லது செல்போனை ஒரே நிமிடத்தில் சார்ஜ் செய்வதற்கான தனித்துவமான தீர்வை கண்டுபிடித்துள்ளார்.


Indian-Origin Researcher Unveiled a New Recharging Technology

மின்சார வாகனங்கள் 10 நிமிடங்களில் ரீசார்ஜ் செய்யலாம்

அதுமட்டும் இல்லீங்க.. உங்களுக்கு மின்சார கார் அல்லது பைக் இருந்தால் இதே முறையைப் பயன்படுத்தி, உங்கள் மின்சார வாகனங்களை வெறும் 10 நிமிடங்களில் சார்ஜ் செய்துவிடலாம். என்ன ஆச்சர்யமாக இருக்குதா..?

இந்த தொழில்நுட்பம் குறித்து விரிவாக பார்க்கலாம் வாங்க.

இந்த தொழில்நுட்ப முறையை கடுபிடித்த இந்திய வம்சாவளி ஆய்வாளர் யார்?

அமெரிக்காவின் கொலராடோ போல்டர் பல்கலைக்கழகத்தின் வேதியியல் மற்றும் உயிரியல் பொறியியல் உதவிப் பேராசிரியராக அங்கூர் குப்தா, தனது ஆராய்ச்சியாளர்கள் குழுவுடன் இணைந்து இந்த திருப்புமுனையான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார்.

அவரது கண்டுபிடிப்பு எப்படி உருவானது?

தேசிய அறிவியல் அகாடமியின் செயல்முறைகள் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், அயனிகள் எனப்படும் சிறிய மின்னூட்டப்பட்ட துகள்கள் சிறிய துளைகளின் சிக்கலான நெட்வொர்க் வழியாக எவ்வாறு பாய்கின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் விவரித்தனர்.

வேதியியல் மற்றும் உயிரியல் பொறியியலின் உதவிப் பேராசிரியரான குப்தா, இந்த முன்னேற்றம் சூப்பர் கெபாசிட்டர்கள் போன்ற திறமையான ஆற்றல் சேமிப்பு சாதனங்களின் வளர்ச்சிக்கு இது பெரும் வாங்கு வகிக்கும் என்று நம்புகிறார்.

ஒரு சூப்பர் கேபாசிட்டர் என்பது ஒரு ஆற்றல் சேமிப்பு சாதனமாகும். இது அதன் துளைகளில் உள்ள அயனி சேகரிப்பை நம்பியுள்ளது. இந்த கண்டுபிடிப்பு மிஸ்சாரா வாகனங்கள் , மின்னணு சாதனங்கள் மற்றும் மின் கட்டங்களுக்கு முக்கியமானது என்று குப்தா கூறினார். சூப்பர் கெபாசிட்டர்கள் பேட்டரிகளை விட வேகமாக சார்ஜ் செய்யக்கூடியவை மற்றும் நீண்ட ஆயுட்காலம் கொண்டவை என்பதைக் குறிப்பிடுவது பொருத்தமானது என்றார்.

Indian-Origin Researcher Unveiled a New Recharging Technology

அந்த பேராசிரியர் கூறும்போது , "பூமியின் எதிர்கால ஆற்றலின் முக்கிய பங்கைக் கருத்தில் கொண்டு, எனது இரசாயன பொறியியல் அறிவை மேம்படுத்தும் ஆற்றல் சேமிப்பு சாதனங்களுக்குப் பயன்படுத்த நான் உத்வேகம் அடைந்தேன். இந்த தலைப்பு ஓரளவு ஆராயப்படாத ஒன்றாக இருந்தது எனக்கான சரியான வாய்ப்பாக இருந்தது. "

இது எப்படி வேலை செய்கிறது

எண்ணெய் தேக்கங்கள் மற்றும் நீர் வடிகட்டுதல் போன்ற நுண்ணிய பொருட்களில் ஓட்டத்தை ஆய்வு செய்ய ஏராளமான இரசாயன பொறியியல் அணுகுமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவை சில ஆற்றல் சேமிப்பு அமைப்புகளில் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்று குப்தா கூறினார்.

ஆய்வின்படி, இந்த கண்டுபிடிப்பு ஆட்டோமொபைல்கள் மற்றும் எலக்ட்ரானிக் கேஜெட்களில் ஆற்றலை சேமிப்பதற்கு மட்டுமல்ல, பவர் கிரிட்களுக்கும் பொருந்தும், அங்கு ஆற்றல் தேவை குறைந்த தேவை குறைவாக உள்ள காலங்களில் வீணாவதைத் தவிர்க்கவும், அதி-விரைவான விநியோகத்தை உறுதி செய்யவும் அதிமான தேவையின் சுழற்சிகளில் திறமையான சேமிப்புக்கும் இது வழிவகை செய்கிறது.

Indian-Origin Researcher Unveiled a New Recharging Technology

பவர் கிரிட்களைப் பற்றி உதவிப் பேராசிரியர் கூறுகையில், ஏற்ற இறக்கமான ஆற்றல் தேவைகளுக்கு குறைந்த தேவை உள்ள காலங்களில் கழிவுகளை குறைக்க திறமையான சேமிப்பு தேவைப்படுகிறது மற்றும் அதிக தேவை உள்ள நேரங்களில் விரைவான விநியோகத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.

"எதிர்கால ஆற்றலின் முக்கிய பங்கைக் கருத்தில் கொண்டு, எனது இரசாயன பொறியியல் அறிவை ஆற்றல் சேமிப்பு சாதனங்களை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்த நான் உத்வேகம் பெற்றேன்" என்று குப்தா கூறினார். "இந்த தலைப்பு மற்றவர்களால் சற்று குறைவாக ஆராயப்பட்டது போல் உணர்ந்தேன், அது எனது ஆபீசுக்கு சரியான வாய்ப்பாகஅமைந்தது." என்று குப்தா கூறினார்.

"சூப்பர் கெபாசிட்டர்களின் முதன்மை முறையீடு அவற்றின் வேகத்தில் உள்ளது. எனவே அவற்றின் சார்ஜிங் மற்றும் ஆற்றலை விரைவாக வெளியிடுவது எப்படி? அயனிகளின் மிகவும் திறமையான இயக்கத்தால் விடுபட்ட இணைப்பைக் கண்டுபிடித்தோம். அதுதான் எங்கள் கண்டுபிடிப்புக்கு புதிய வழிவகுத்தது. என்று அவர் மேலும் கூறினார்.

Indian-Origin Researcher Unveiled a New Recharging Technology

இந்த கண்டுபிடிப்பு சில நிமிடங்களில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான துளைகளின் சிக்கலான வலையமைப்பில் அயனி ஓட்டத்தின் உருவகப்படுத்துதல் மற்றும் கணிப்புக்கு உதவுகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த கண்டுபிடிப்புக்கு முன், அயனி இயக்கங்கள் ஒரு நேரான துளைக்குள் நிகழ்வதாக மட்டுமே ஏற்கனவே விவரிக்கப்பட்டுள்ளன என்று அவர்கள் விளக்கினர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!