/* */

கடற்கரை பாறை இடுக்கில் விழுந்த ஐபோன்..! கெடைச்சிருச்சா..?

கடற்கரை ஓரங்களில் இருக்கும்போது செல்போனை கவனமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். செல்போனை கவனமா வச்சுக்கங்க.

HIGHLIGHTS

கடற்கரை பாறை இடுக்கில் விழுந்த ஐபோன்..! கெடைச்சிருச்சா..?
X

ஐபோனை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர்.

Cops Find Karnataka Woman's iPhone, Lost on Kerala Vacation in 7 Hours, Rescue Crew Recovered the Misplaced Phone, Woman Loses Apple iPhone on Kerala Beach, Rescue Services Retrieved a Woman’s ₹1.6 Lakh iPhone

கர்நாடகாவைச் சேர்ந்த பெண் ஒருவர் விடுமுறையைக் கழிப்பதற்காக கேரளாவுக்குச் சுற்றுலா சென்று இருந்தார். அப்போது கடற்கரை அருகே பாறைகள் மீது அவரது நண்பர்களுடன் நின்றுகொண்டிருந்தபோது கைதவறி அவரது ஐபோன் பாறைகளின் இடுக்கில் விழுந்துவிட்டது.

அந்த ஐபோனின் விலை சுமார் ரூ.1.6 லட்சம். பெரிய மதிப்புள்ள அவரது தொலைபேசி கடற்கரையில் உள்ள பெரிய பாறைகளின் சிறிய இடுக்கில் விழுந்ததை கேரள தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை அதிகாரிகளுக்கு அந்த பெண் தங்கியிருந்த குடிலின் நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர்.

Cops Find Karnataka Woman's iPhone

தீயணைப்புத் துறையினருடன் குடியிருப்பாளர்களும் சேர்ந்து ஐபோனை தேடத் தொடங்கினர். பாறையை நகர்த்த பெறிய கயிறுகளை தீயணைப்புத் துறையினர் பயன்படுத்தினர். ஆனாலும் சில நேரங்களில் அலைவந்து அடித்ததால் தேடுதலில் சுணக்கம் ஏற்பட்டது. மழை தூறல் விழுந்ததால் வேலையை தொடர்வதில் சிரமம் ஏற்பட்டது. பாறைகளை நகர்த்தி இறுதியாக, ஏழு மணி நேர தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு அந்த பெண்ணின் விலையுயர்ந்த மொபைல் போன் மீட்கப்பட்டது.

தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் குழு முதல் தேடலின் போது ஐபோனை உடனடியாக மீட்டெடுக்க முடியவில்லை. இருப்பினும், குழு தனது முயற்சியைத் தொடர்ந்தது, ஏழு மணிநேர முயற்சிக்குப் பிறகு தொலைபேசி மீட்டெடுக்கப்பட்டது.

மீட்புக் குழுவினரின் முயற்சிகளைப் பாராட்டுவதற்காக இந்த சம்பவத்தின் வீடியோவும் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டது

Cops Find Karnataka Woman's iPhone


“எங்கள் குடிலில் தங்கியிருந்த கர்நாடக பெண்ணின் 1,50,000 மதிப்புள்ள ஐபோன் கடற்கரையில் உள்ள பெரிய பாறைகளுக்கு இடையில் விழுந்துவிட்டது. நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும், ஐபோனை மீட்க முடியவில்லை. காற்று மற்றும் மழையுடன் கூடிய பலத்த அலைகள் தேடுதலுக்கு சவாலாக மாறி இருந்தது.

இருப்பினும், அண்டிலியா சேலட் குழு மற்றும் கேரளா தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் 7 மணி நேரம் முயற்சி செய்து மொபைல் போனை மீட்டனர். இதற்கு உதவிய சுஹைல் மற்றும் கேரள தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினருக்கு ஆன்டிலியா சேலட் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் ” என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

ஆன்டிலியா சேலட் குழு பகிர்ந்துள்ள Instagram இடுகையில், சாதகமற்ற வானிலை இருந்தபோதிலும் பணியாளர்கள் தங்கள் தேடுதல் பணியைத் தொடர்ந்ததால், கேரள தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அவர்களது பணித்திறமையை காட்டுவதற்கு இந்த சம்பவம் ஒரு அடையாளமாக இருக்கிறது. நாமும் அந்த குழுவை பாராட்டுவோம்.

ஐபோனை கண்டுபிடிக்கும் வீடியோ

https://www.instagram.com/reel/C7ZIbJkPQyv/?utm_source=ig_web_copy_link

Updated On: 8 Jun 2024 10:30 AM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  ஜம்முவில் அமைதியை கொண்டு வர ராணுவத்திற்கு முழு சுதந்திரம்
 2. திருவண்ணாமலை
  அதிமுக நமக்கு எதிரி அல்ல; பாஜக கூட்டணி தான் எதிரி: அமைச்சர் பேச்சு
 3. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
 4. ஆன்மீகம்
  Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
 5. திருவள்ளூர்
  கல்யாண வெங்கடேச பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
 6. நாமக்கல்
  108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு மறு நினைவூட்டல் சிறப்பு பயிற்சி
 7. திருவண்ணாமலை
  திருவண்ணாமலையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
 8. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் நாளைய (ஜூன்.19) மின்தடை
 9. செய்யாறு
  எல்லையம்மன், வேடியப்பன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா
 10. கோவை மாநகர்
  சாக்கடை குழியில் தவறி விழுந்த இளம் பெண்:குழியை மூடிய கோவை மாநகராட்சி