Bull Inside Bank in Unnao-வங்கிக்குள் நுழைந்த காளை..! பணம் எடுக்க வந்திருக்குமோ?

Bull Inside Bank in Unnao-வங்கிக்குள் நுழைந்த காளை..! பணம் எடுக்க வந்திருக்குமோ?
X

Bull Inside Bank in Unnao-வங்கிக்குள் நுழைந்துள்ள காளை 

உத்தரபிரதேசம் உன்னாவோ பகுதியில் உள்ள ஒரு வங்கிக் கிளைக்குள் தெருவில் சுற்றித்திரிந்த காளை புகுந்துவிட்டது.அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Bull Inside Bank in Unnao,Stray Bull,Trending Video,Unnao,Uttar Pradesh,Viral Video, Panic Ensues as Stray Bull Enters Bank Premises,Uttar Pradesh

வட இந்தியாவில், குறிப்பாக உத்தரபிரதேசத்தில் குளிர்காலத்தில் வெப்பநிலை குறைந்து வருவது மனிதர்களை மட்டுமல்ல, விலங்குகளையும் கவலையடையச் செய்துள்ளது. உத்தரபிரதேசத்தில் தெருவில் சுற்றித்திரியும் கால்நடைகளை குளிர் தாக்கி வருகிறது.

Bull Inside Bank in Unnao

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவோவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) கிளைக்குள் வழிதவறி வந்த காளை புகுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிகரித்து வரும் தெருக் கால்நடைகளின் எண்ணிக்கையால் பெரும் பிரச்சனையை எதிர்கொண்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் தெருக் கால்நடைகளின் தொல்லை அதிகரித்து வருவதால், மாநில அரசு இதுவரை இப்பிரச்னையை கையாள்வதில் தோல்வியடைந்து வருகிறது.

காளை குளிரால் நடுங்கியது

உன்னாவோவில் உள்ள சதர் கோட்வாலி பகுதியின் ஒரு முக்கிய சந்திப்பில் ஷாகஞ்சில் அமைந்துள்ள எஸ்பிஐயின் பிரதான கிளையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தெருவில் சுற்றித்திரியும் அந்த காளை மாடு வங்கிக்குள் தஞ்சம் புகுந்தது. அந்த காளை குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தது. வங்கிக்குள் காளை புகுந்ததால் வங்கி ஊழியர்கள் மற்றும் வங்கியில் இருந்த நுகர்வோர் அச்சமடைந்தனர். வங்கியில் இருந்த மக்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது.

Bull Inside Bank in Unnao

'அட..பயப்படாதீங்கப்பா. எனக்கு ஒரே குளுரு. தாங்கமுடியலை. அதான் உள்ள வந்துட்டேன். நீங்க உங்க வேலையைப் பாருங்க. நான் ஒரு ஓரமாக இருந்தக்கறேன்' என்று கூறுவது போல காலை அப்பாவியாக நின்றது. பார்க்கத்தான் அவன் முரடனாக இருந்தான். ஆனால் ரொம்ப ரொம்ப சாஃப்ட். வங்கியின் காவலர் வந்து விரட்டியதும் அவன் எந்த எதிர்ப்பையும் காட்டாமல் போய்விடுகிறான்.

இருப்பினும், காளை அமைதியாகதான் இருந்தது. மேலும் வங்கியில் இருந்த யாரையும் தாக்கவோ அல்லது காயப்படுத்தவோ இல்லை. எஸ்பிஐ வங்கி கிளையில் காளை அமைதியாக நிற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வங்கிக்குள் காளை நிற்பதையும், அந்த காளையிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள மக்கள் அலறியடித்து அங்கும் இங்கும் ஓடுவதையும் வீடியோவில் காணலாம்.

Bull Inside Bank in Unnao

'நீங்கள்லாம் குளுரு தெரியாம இருக்க சொட்டர் போடறீங்க..ஜெர்க்கின் போடறீங்க. நாங்க என்ன செய்யறது? குளுர்ல நாங்களும் கஷ்டப்படறோம். எங்களுக்கு ஏதாவது செய்ங்கப்பா.." என்று சொல்லாமல் சொல்லிவிட்டுப்போனது காளை.

காளை வங்கிக்குள் புகுந்த வீடியோ இந்த இணைப்பில் உள்ளது. க்ளிக் பண்ணி பாருங்க.

https://twitter.com/i/status/1744998345460834402

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!