/* */

நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளே, மாவட்ட நிர்வாகம் சொல்வதை கேளுங்க!

பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் அம்ரித் கேட்டுக்கொண்டு உள்ளார்

HIGHLIGHTS

நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளே, மாவட்ட நிர்வாகம் சொல்வதை கேளுங்க!
X

கலெக்டர் அம்ரித்

நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட கல்லாறு, கக்கநல்லா, நாடுகாணி, பாட்டவயல், சோலாடி, தாளூர், கெத்தை, நம்பியார்குன்னு ஆகிய சோதனைச் சாவடிகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்டத்திற்குள் எடுத்து வர தடை செய்யப்பட்டு உள்ளது.

இதனை செயல்படுத்தும் விதமாக அனைத்து சோதனை சாவடியிலும் முன்னாள் ராணுவத்தினர், தன்னார்வலர்களை கொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சோதனைச்சாவடிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு வாகன சோதனையின் போது தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை நீலகிரிக்குள் எடுத்து வருவது கண்டறியப்பட்டால், பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்வதுடன் அபராதம் விதிக்கப்படும்.

மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பு வாகனச்சோதனையில் ஈடுபடும் பணியாளர்களுக்கும் மற்றும் நீலகிரி மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்ற மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் அம்ரித் கேட்டுக்கொண்டு உள்ளார்.

Updated On: 1 March 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்