Mayanur dam-மாயனூர் அணைக்கு சுற்றுலா செல்வோமா..?

Mayanur dam-மாயனூர் அணைக்கு சுற்றுலா செல்வோமா..?
X

Mayanur dam-மாயனூர் அணைப் பூங்கா (கோப்பு படம்)

கரூர் மாவட்டத்தில் வளர்ந்து வரும் சுற்றுலா தலங்களில் மாயனுர் அணை முக்கிய இடத்தைப்பற்றுள்ளது. அங்குள்ள பூங்கா அனைவரையும் கவர்ந்துள்ளது.

Mayanur dam

மாயனூர் தமிழ்நாட்டில் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் மாயனூர் ஊராட்சிக்குட்பட்ட ஒரு சிறிய ஊர் ஆகும். காவிரியின் தென் கரையில் அமைந்து புண்ணியத் தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்கிறது.

இந்த ஊர் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கரூரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும். குளித்தலையிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு காவிரியாறு அகண்ட காவிரியாக அமைந்தள்ளது.


Mayanur dam

மாயனூர் காவிரி ஆற்றில் 1924ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அணை 2024ம் ஆண்டில் அதன் நூற்றாண்டு விழாவைக்கொண்டாட உள்ளது. காவிரி ஆறு, தலைக் காவிரியில் உற்பத்தியாகி ஆங்காங்கே பாசன வாய்க்கால்களாக பிரிந்து பல்வேறு மாவட்டங்கள் வழியாக சென்று நெல், வாழை, கரும்பு போன்ற பயிர்களை விளைவிக்கச் செய்து செழிப்புற வைக்கிறது.

விவசாயத்திற்கு மூல ஆதாரமாக காவிரி விளங்குகிறது. காவிரி டெல்டா பகுதிகளில் காவிரி ஆறு இல்லை என்றால் விவசாயமே இல்லை என்ற நிலை ஆகிவிடும். முன்பெல்லாம் பருவம் தவறாமல் மும்மாரி மழை பெய்து காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. அப்போதெல்லாம் தண்ணீருக்காக அண்டை மாநிலத்தை தமிழகம் எதிர்பார்த்திருக்கவில்லை. அதனால் தஞ்சை செழித்து வளர்ந்தது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று பெயர் பெற்றது.


குறுவை, சம்பா பருவத்திற்கு குறித்த காலத்தில் நமக்கு தண்ணீர் கிடைத்தது. அதை வைத்து முப்போகம் விளைவித்தோம். தானிய உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் தலை நிமிர்ந்து நின்றது. இயற்கையின் மாற்றத்தால் கடந்த சில ஆண்டுகளாகவே போதிய அளவு மழை இல்லை. மழை இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கண்ணீரில் மிதக்கின்றனர்.

Mayanur dam

ஆனால் இன்று தண்ணீருக்காக அண்டை மாநிலத்திடம் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் கொடுக்கவேண்டாம் என்று அதற்கு ஒரு போராட்டம் வேறு. இவர்கள் இந்தியர்களாம். காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும். அதிகப்படியான தண்ணீர் வரும்போது வெள்ள அபாயமாக அறிவித்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு பெருக்கெடுத்து செல்லும்.


கர்நாடகம் காவிரியை வடிகாலாக பயன்படுத்தி வருகிறதே தவிர தமிழகத்துக்கு தண்ணீர் தருவதற்காக திறந்துவிடவில்லை.

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது அதை திறந்துவிட்டுவிட்டு நாங்கள் அவ்வளவு தண்ணீர் தந்துள்ளோம் என்பார்கள். கடந்த ஆண்டுகளில் கூட காவிரியில் 1.50 லட்சம் முதல் 2 லட்சம் கன அடி வரை தண்ணீர் சென்றது. ஆனால், அந்த தண்ணீரை சேமித்து வைப்பதற்கு நம்மிடம் போதிய அணைகள் இல்லை.

Mayanur dam

அப்படி வரும் தண்ணீரை புதிய அணைகளைக்கட்டி சேமித்து வைத்தாலே யாரிடமும் தண்ணீர் கேட்டு கையேந்தத் தேவையில்லை. 1924 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மாயனுர் 99 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அடுத்த ஆண்டு நூற்றாண்டுக்குள் நுழைகிறது. காவிரி நூற்றாண்டு கொண்டாட்டத்திற்கு மாயனூர் தயாராகி வருகிறது.

Mayanur dam


உச்ச வெள்ளம்

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஆண்டுகளும், எவ்வளவு கன அடி தண்ணீர் சென்றது போன்ற விபரங்கள் மாயனூர் பழைய கட்டளை கதவணையில் தகவல் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, 1924ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி மாயனூர் பழைய கட்டளை படுகை அணை வழியாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 4 லட்சத்து 63 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்றுள்ளது. 1961ம் ஆண்டு அதே ஜூலை மாதம் 7ம் தேதி 3 லட்சத்து 88 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து 1977, 1979, 1980, 2022ம் ஆண்டு வரை காவிரியில் பலமுறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் லட்சக்கணக்கான கன அடியில் சென்றுள்ளது. 1924 ஆம் ஆண்டு காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுதான் உச்சகட்ட சாதனையாக இருந்துள்ளது. அதன் பிறகு 4 லட்சத்திற்கு மேல் தண்ணீர் காவிரியில் தண்ணீர் சென்றதில்லை என்கின்றனர் நீர் வளத்துறையினர்.


Mayanur dam

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கூட, 1924ம் ஆண்டு சாதனையை எட்டிப் பிடிக்க முடியுமா? என்பது இயற்கையின் கையில்தான் உள்ளது. இந்த ஆண்டு வரை 1924 ஆம் ஆண்டுதான் உச்சகட்ட சாதனை. அடுத்த ஆண்டு 2024ம் ஆண்டு ஜூலை 24ம் தேதியோடு 100 ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், நூற்றாண்டு சாதனை நோக்கி மாயனூர், காவிரி தன் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.


மாயனுர் சுற்றுலாத் தலம்

கரூர் மாவட்டத்தில் மாயனூர் அணை முக்கிய சுற்றுலா இடமாக வளர்ச்சி பெற்றுள்ளது. அணையில் மீன் பிடித்து அங்கேயே சூடாக பொரித்து தருகிறார்கள். அணை மீன் என்பதால் அதற்கென்று ஒரு தனி சுவை உள்ளது.

Mayanur dam


அம்மா பூங்கா

தற்போது மாயனூரில் பூங்கா அமைக்கப்பட்டு சிறுவர்கள் விளையாதுவதற்கு பல்வேறு விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் மாயனுர் அணை குழந்தைகளுக்கு குதூகலமான இடமாக மாறியுள்ளது. அந்த பூங்காவிற்கு அம்மா பூங்கா என்று பெயரும் வைக்கப்பட்டுள்ளது. ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பெற்றோர் இங்கு கூடுகின்றனர்.

Tags

Next Story