உங்க செல்போனில் நவம்பர் 1 முதல் மெசேஜ் வராது.. புது விதி அமல்

உங்க செல்போனில் நவம்பர் 1 முதல் மெசேஜ் வராது.. புது விதி அமல்
X
டிராயின் புது விதியால் உங்க செல்போனில் நவம்பர் 1 முதல் மெசேஜ் வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் மொபைல் போன்களில் வரும் நவம்பர் 1 முதல் குறுஞ்செய்தி பெறுவதில் தடங்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் (டிராய்) புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் அனைத்து குறுஞ்செய்திகளையுமு் அடையாளம் காண வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதனால் வங்கிப் பரிவர்த்தனை, டெலிவரி அப்டேட்கள், பணப் பரிவர்த்தனை அலெர்ட்கள் போன்ற குறுஞ்செய்திகள் அனுப்புவதில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு சிக்கல்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உதாரணமாக நிறுவனங்கள், அவர்கள் டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்கள் மூலம் ஓடிபி உள்ளிட்டவைகளை அனுப்பும். இதில் அனுப்பப்படும் தகவலில் திரும்ப அழைக்கக்கூடிய எண், வங்கியால் அங்கீகரிக்கப்படாத, அடையாளம் காணக்கூடியதாக இல்லாவிட்டால், அந்த எஸ்.எம்.எஸ் தடை செய்யப்படும். வாடிக்கையாளர்களின் மொபைல் போனுக்கு டெலிவரி ஆகாது.

டிராயின் இந்தப் புதிய விதிகளுக்குத் தளர்வளிக்க வேண்டுமென்று, செல்லுலார் ஆப்பரேட்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா, ஜியோ, ஏர்டெல், மற்றும் வோடாஃபோன் ஐடியா நிறுவனங்கள் கோரிக்கைகளை வைத்துள்ளன.

இதன் மூலம் வாடிக்கையாளர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் வணிக நிறுவனங்கள் இச்சிக்கலைச் சந்திக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதியை அமல்படுத்த மேலும் இரண்டு மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என தொலைதொடர்பு நிறுவனங்கள் கூட்டாக கோரிக்கைகள் வைத்துள்ளன.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil