உலக பணக்கார ஜெப் பெசோஸ் விண்வெளிக்கு சென்று மீண்டும் பூமி திரும்பினார்
ஜெப் பெசோஸ் விண்வெளிக்கு சென்று மீண்டும் பூமி திரும்பினார்
உலக பணக்காரர்களில் ஒருவரான ஜெஃப் பெசோஸ் விண்வெளிக்கு சென்று மீண்டும் பூமி திரும்பினார்.
நியூ ஷெப்பர்ட் ராக்கெட்டில் ஜெஃப் பெசோஸ் உட்பட 4 பேர் விண்வெளிக்கு சென்றனர்.ஜெஃப் பெசோஸ் உள்ளிட்ட நால்வர் சுமார் 7 நிமிடங்கள் விண்வெளிக்கு சென்று திரும்பினர். மேற்கு டெக்ஸாஸில் உள்ள பாலைவனத்தில் தரையிறங்கினர்.
உலக பணக்காரர்களில் ஒருவரான அமேசான் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டார். சுமார் 7 நிமிடங்கள் விண்வெளியில் இருந்து மீண்டும் பூமிக்கு திரும்பினார்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள ஏவுதளத்தில் இருந்து இந்திய நேரப்படி இன்று மாலை நியூ ஷெப்பர்ட் ராக்கெட் விண்வெளிக்கு ஏவப்பட்டது.
நிலவில் மனிதன் சென்று வந்ததன் 52-ம் ஆண்டை கொண்டாடும் விதமாக விண்வெளிக்கு மனிதர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல புளு ஆர் ஜின் நிறுவனம் திட்டமிட்டது.அதன்படி, அமேசான் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ், அவரது சகோதரர் மார்க்பெசோஸ், 82 வயதான மூதாட்டி வாலிஃபங்க் உள்பட 4 பேர் விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர். சுமார் 11 நிமிடங்கள் விண்ணில் இருந்த பிறகு பாராஷீட் வாயிலாக நான்கு பேரும் பூமிக்குத் திரும்பினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu