/* */

வீட்டிலுள்ள ஃபிரிட்ஜ் வெடிக்க காரணம் என்ன?

Refrigerator Blast-நீங்கள் வெறுமனே வெளித்தோற்றத்தில் பார்த்து பழகி சிரித்துக் கொண்டிருக்கும் அந்த குளிர்சாதன பெட்டி ஒரு மினி அணு குண்டு போன்றது என்பது உங்களுக்கு தெரியுமா?

HIGHLIGHTS

Refrigerator Blast
X

Refrigerator Blast

Refrigerator Blast-மனிதனின் கண்டுபிடிப்புகளில் எது முக்கியமானதோ இல்லையா வீட்டில் அம்மாக்களுக்கும் மனைவிகளுக்கும் இந்த ஃபிரிட்ஜ் தான் மிகப் பெரிய கண்டுபிடிப்பு. நான்கு நாட்கள் ஆனாலும் அரைத்த மாவை ஊற்றி இட்லி, தோசை, ஊத்தப்பம், இட்லியை உதிர்த்து போட்டு உப்புமா என தொடர் தாக்குதல்களை நம் மீது தொடுக்கிறார்கள். சரி இந்த ஃபிரிட்ஜை வாங்காமலே இருந்துவிட்டால் என்ன என யோசித்தாலும் நமக்குதான் சிக்கல். ரவை உப்புமாக்களும் சேமியா கிச்சடிகளும் கோதுமை தோசைகளும் அடுப்பங்கரையில் வரிசைகட்டி நிற்கின்றன.

ஒரு ஆண் மகனாக இது கஷ்டம்தான் என்றாலும் சப்பாத்தி கட்டை, தயிர் கடைவான் சில சமயங்களில் சொம்பு முதலிய ஆயுதங்களால் பல்வேறு பின் விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என்பதால் ஒவ்வொரு ஆண் மகனும் அமைதியாக கடந்து சென்று கொண்டிருக்கிறோம். அதே நேரம் வீட்டில் ஃபிரிட்ஜால் வேறு சில உயிருக்கு ஆபத்தான பிரச்னைகளும் இருக்கின்றன.

நீங்கள் வெறுமனே வெளித்தோற்றத்தில் பார்த்து பழகி சிரித்துக் கொண்டிருக்கும் அந்த குளிர்சாதன பெட்டி ஒரு மினி அணு குண்டு போன்றது என்பது உங்களுக்கு தெரியுமா? கொஞ்சம் பிசுறு அடித்தாலும் அது வெடிகுண்டாக மாறி அருகாமையில் இரண்டு வீடுகள் வரை பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எந்த ஒரு சாதனமும் கவனக் குறைவாக கையாண்டால் தான் பிரச்னை அதனை சரியான முறையில் கையாள்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் இதுவரை சரியான முறையிலதான் கையாண்டு வருகிறீர்களா என்பதையும் இங்கே சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

நன்றாக வேலை செய்து கொண்டிருக்கும் ஃபிரிட்ஜ் ஏன் திடீரென வெகுண்டெழுந்து வெடித்து விடுகிறது? அதற்கு முக்கியமான சில காரணங்கள் இருக்கலாம்.

ஃபிரிட்ஜை பாதுகாப்பாக கையாள்வது எப்படி? | How to Maintain Refrigerator

 • முதல் விசயம் சரியான பவர் சப்ளையில் நாம் ஃபிரிட்ஜை கையாள வேண்டும். இது பெரும்பாலும் அனைவரது வீட்டிலும் சரியாகத்தான் இருக்கும். கொஞ்சம் பழைய வீடுகளிலும் கிராமப்புற வீடுகளிலும் அடிக்கடி மின்சார பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது என்றால் அதை சரியாக முறைப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.


 • சரியான பிளக் பாய்ண்ட்டில் ஃபிரிட்ஜை நீங்கள் கணெக்ட் செய்து வைத்திருக்க வேண்டும். லூஸ் காண்டக்ட், அதிக ஈரமான, உடைந்து நொறுங்கிய பிளக் பாய்ண்ட், மோசமான கேபிள்களில் பயன்படுத்துவதை தவிர்த்துவிட வேண்டும்.


 • ஸ்டெபிளைசர் தேவையில்லை என்று கூட சில ஃபிரிட்ஜில் சொல்வார்கள். In Build stabiliser கொண்ட ஃபிரிட்ஜ்கள் பொதுவாக 135v லிருந்து 290v வரையிலான வால்டேஜ் மாற்றங்களில் சரியான அளவு மின்சாரத்தை வழங்கவல்லது. இதனால் அதற்கு தேவைப்படாமல் இருக்கும். ஆனால் எல்லா ஃபிரிட்ஜும் இப்படி இருக்காது. சரியாக தெரிந்து கொண்டு ஸ்டெபிளைசர் பயன்படுத்த வேண்டும்.


 • ஃபிரிட்ஜ் ஒன்றும் குடோனோ குப்பைத் தொட்டியோ அல்ல. எல்லாவற்றையும் அமுக்கி உள்ளே எடுத்து வைப்பதற்கு. அதனை சரியான முறையில் அடுக்கி டைட்டாகாமல் சரியாக மூடி வைக்க வேண்டும்.


 • ஃபிரிட்ஜை நல்ல காற்றோட்டம் கொண்ட இடங்களில் வைப்பது நல்லது. பின் மற்றும் பக்கவாட்டுக்கு இடம் கொடுத்து வைக்க வேண்டும்.


 • அதிக வெப்பம் கொண்ட இடத்தில் ஃபிரிட்ஜை வைக்கவே கூடாது. வெயிலும் படக் கூடாது.


 • ஃபிரிட்ஜ் முழுவதையும் கவர் செய்யும் வகையில் துணியாலோ, பிளாஸ்டிக் பைகளாலோ மூடி வைக்கக் கூடாது.ஃபிரிட்ஜ் எப்படி வெடிக்கிறது? அதற்கான காரணம் ? | Reason Behind Fridge blast

எலக்ட்ரானிக் பொருட்கள் அவ்வப்போது அப்டேட் ஆகிக் கொண்டே இருக்கும். அதில் பயன்படுத்தப்படும் பொருட்களும் வசதிக்கு ஏற்ப கூடுதலாக தேவைப்படும். அந்த வகையில் முன்பு இருந்த ஃபிரிட்ஜ்களை விட அதிக வாயுக்கள் நிறைந்திருக்கின்றன இப்போது வெளிவரும் ஃபிரிட்ஜ்களில். இந்த வாயுக்களே அழுத்தம் காரணமாக வெடிப்பதற்கு refrigerator blast reason வாய்ப்பாக வருகின்றன.


விபத்துக்களை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் | Things to do to avoid Fridge explode

ஃபிரிட்ஜில் வரும் மின்சாரம் சீராக இருக்கிறதா என்பதை அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையேனும் ஃபிரிட்ஜை சர்வீஸ் செய்து பார்க்க வேண்டும்.

அளவுக்கதிகமான பொருட்களை போட்டு ஃபிரிட்ஜில் குவிக்க கூடாது.

இரண்டுக்கு மேற்பட்ட நாட்கள் வெளியில் செல்கிறீர்கள் என்றாலோ ஃபிரிட்ஜில் வேறு ஏதும் பொருட்கள் இல்லை என்றாலோ ஆஃப் செய்துவிட்டு செல்வது நல்லது.

ஃப்ரீசரில் அடிக்கடி ஐஸ் கட்டிக் கொண்டிருந்தால் தெர்மோஸ்டேட்டை உடனே மாற்ற வேண்டும். இது கம்ப்ரஸர் சூடாகி வெடிப்பதற்கு காரணமாகலாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 5 April 2024 6:36 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  காயங்களை ஆற்றிக்கொள்ள 'மறதி ஒரு மாமருந்து'..!
 2. லைஃப்ஸ்டைல்
  'அப்பா' எனும் ஆத்மாவை உணருங்கள்..! உங்கள் மூச்சாக இருப்பவர் அவரே..!
 3. ஆன்மீகம்
  நெற்றிக்கண் உடைய சிவனே..! வெற்றியருள்வாய் எமக்கே..!
 4. லைஃப்ஸ்டைல்
  நல்ல நட்பு என்பது ஒரு நூலகம்..! நட்பின் வரிகள்..!
 5. வானிலை
  5 மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை..!
 6. க்ரைம்
  பெரியபாளையம் அருகே வீட்டில் தனியாக இருந்த கூலி தொழிலாளி அடித்து கொலை
 7. உலகம்
  துபாயில் கனமழை : வெள்ளப்பெருக்கில் மூழ்கிய வாகனங்கள்..!
 8. ஈரோடு
  ஈரோட்டில் மக்களை கவரும் வகையில் திமுக இளைஞர் அணியினர் நூதன பிரசாரம்
 9. இந்தியா
  தேசிய கீதம் வெறும் வரிகளின் தொகுப்பு மட்டும் அல்ல. அது நம் தேசத்தின்...
 10. லைஃப்ஸ்டைல்
  Leukemia meaning in Tamil -இரத்தம், எலும்பு மஜ்ஜையை சிதைக்கும்...