இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself
இன்ஸ்டாகிராம் என்பது உலகம் முழுவதும் புகழ்பெற்ற ஒரு சமூக ஊடகத் தளம் ஆகும். இதன் மூலம் பயனர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துகொள்ள முடியும், மற்றவர்களின் பதிவுகளைப் பார்க்கலாம், கருத்துகளை பகிரலாம், லைக் செய்யலாம், பின்னூட்டங்கள் இடலாம், மற்றும் பல. தமிழ் பேசும் மக்கள் இந்தத் தளத்தைப் பயன்படுத்தி தமிழில் உள்ளடக்கம் உருவாக்கி பகிர்ந்துகொள்கின்றனர். இது தமிழில் உள்ள தனித்துவமான கலாச்சாரம் மற்றும் மொழியை வெளிப்படுத்துவதற்கான ஒரு முக்கிய தளம் ஆக உள்ளது.பொதுவாக, இன்ஸ்டாகிராம் சேவை முடங்குவது பல காரணங்களால் ஏற்படலாம்.
இந்தியாவிலும், வெளிநாடுகளின் பல்வேறு பகுதிகளில் இன்ஸ்டாகிராம் முடங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மெட்டா நிறுவனத்தின் கீழ் பல செயலிகள் இயக்கபடுகின்றன. அதாவது
பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள் அதேபோல், இளம் வயதினர்களின் பொழுது போக்கு மற்றும் தகவல் பகிர்வு வலைத்தளமாகவும் இன்ஸ்டாகிராம் செயலி மெட்டா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.
இப்படி பட்ட சூழ்நிலையில் பல லட்சக்கணக்கான மக்கள் இன்ஸ்டாகிராம் பயனர்கள், அந்த செயலியை பயன்படுத்த முடியாமல் தத்தளிப்புக்கு உள்ளாகினர் . இதனால் பல பிரச்சனைகளை சிந்திக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது ,குறிப்பாக ஸ்டோரிகள் அப்லோட் செய்வதில் பிரச்னை, மெசேஜ் அனுப்பவதில் பிரச்னை,லாக்இன் பிரச்னை, சர்வர் உடன் இணைவதில் பிரச்னை என பல் தொழில் நுட்ப கோளாறுகளை இந்த இன்ஸ்டாகிராமில் உள்ளதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தது .
இந்த தொழில்நுட்ப பிரச்னைக்கு இன்ஸ்டாகிராம் நிறுவனம் எந்த விதமான பதிலும் இல்லாமல் ,எந்த நடவெடிகைகளும் மேற்கொள்ளாமல் இருக்கின்றது . இருந்தாலும் கூட அந்த பிரச்சனைகள் சரி ஆகி விட்டதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர். நிலைமையானது பழைமைக்கு திரும்பியதாக கூறப்படுகிறது
மொத்த பயனர்களில் லாக்இன் செய்வதில் 42 சதவீதம் ,சர்வர் இணைவதில் 39 சதவீதத்தினருக்கு, செயலியை பயன்படுத்துவது 19 சதவீத பயனர்களுக்கு பிரச்சனைகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பயனர்கள் X தளத்தில் இன்ஸ்டாகிராம் முடங்கியது குறித்து பதிவிட்டிருந்தனர்.இந்த பிரச்சனை உலகளவில் நீடிப்பதால் ,இன்ஸ்டாக்ராமை அதிகம் உபயோகிக்கும் பயனர்களுக்கு தகவல் தொடர்பும், வணிக ரீதியான செயல்பாடுகளும் புஷ்டிப்பு அடைந்த்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர் .
ஆன்லைன் சேவை இடையூறுகளை கண்காணிக்குக் கூடிய தளமாக Downdetector என்ற தளம் ஆகும் . இதில் 700 புகார்களை பெற்றதாக பதிவு செய்திருக்கிறது. இந்த ஒரு வாரத்திற்குள் இன்ஸ்டாகிராம் செயலி இதுபோல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்குவது இரண்டாவது முறையாகும். இன்ஸ்டாகிராம் சார்ந்த 130 புகார்கள் இரவு 9.51 மணியளவில் கடந்த நவம்பர் 13ஆம் தேதி இந்தியாவில் இருந்து மட்டும் வந்ததாக கூறப்படுகின்றது .
தொழில்நுட்ப டெவலப்பரான அலெஸாண்ட்ரோ பலுஸி கூறியதாவது மெட்டா நிறுவனம் அதன் சமூக வலைதளங்களில் புதிய செயற்கை நுண்ணறிவு வசதி ஒன்றை ஏற்படுத்த தயாராகி வருவதாக இருக்கின்ற தகவலை வெளியிட்டிருந்தார். இன்ஸ்டாகிராம் தற்போது ,பயனர்கள் தங்களின் dp சுயவிவரப் புகைப்படத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் சுயமாக உருவாக்கிக் கொள்ளும் வசதியை விரைவில் பெறலாம் என்ற தகவலை அவர் தெரிவித்து இருக்கிறார்.
அது மட்டுமல்லாது தங்களின் dp சுயவிவரப் புகைப்படத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் சுயமாக உருவாக்கிக் கொள்ளும் வசதியை வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கிலும் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவித்த அவர், இதுகுறித்து வேறு தகவல்கள் இன்னும் உறுதியாகவில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், "Create an AI Profile Picture" என இன்ஸ்டாகிராமில் அவருக்கு காணப்பட்ட ஆப்ஷனை சுட்டிக்காட்டி, அதன் புகைப்படத்தையும் வெளியிட்டு இந்த தகவலை பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கதக உள்ளது .இந்த
இன்ஸ்டாகிராம் பற்றிய தகவல்களை பற்றிய விரிவான தகவல்கள் மற்றும் விவரங்களாக இவை கூறப்படுகின்றது .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu